அரியலூர், நவ. 18: அரியலூர் மாவட்டத்தில் உப வடிநிலப்பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 65 சதம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஆனைவாரி ஓடை உப வடிநிலப்பகுதியில் உள்ள ஏரிகளின் ஆயக்கட்டுப்பகுதியில் குறைந்த நீரினை கொண்டு, அதிகப்படியான விளைச்சலை பெற 2009-10 ஆம் ஆண்டு முதல் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் 65 சதம் மானியம் வழங்க தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பிற பகுதியில் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக விவசாயிகள் மேலும் விபரம் பெற, உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, அண்ணாநகர் மெயின் ரோடு, அரியலூர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஜோதிபுரம், சிதம்பரம் சாலை, செயங்கொண்டம் என்ற முகவரிகளில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:தினமணி