ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை துவங்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வலியுறுத்தி 17 கிராமங்களில் பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம் ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும்.திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வீடுதோறும் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.அல்லது இத்திட்டத்தை கைவிட்டு விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்கி நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என ஜெயந்கொண்டம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுநடவடிக்கை எடுக்கவில்லை .அதை கண்டித்தும் கோரிக்கைகளை விரைவாகக் நிறைவேற்றகோரியும் ஜெயந்கொண்டம் பகுதியிலுள்ள உடையார்பாளையம்,செங்குந்தபுரம்,மேலூர்,இலையூர்,வரியங்காவல்,தேவனூர்,கொளத்தூர்,கல்வெட்டு,கீழகுடியிருப்பு,கல்லாத்தூர்,தண்டலை,புதுக்குடி,கண்டியங்கொல்லை உட்பட 22 கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற தர்னாவுக்கு ஆண்டிமடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.தர்னாவை விவசாய சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசினார்.
இப்போராட்டத்தில் எஸ்.தங்கதுரை, எம்.தங்கராசு,ஜெ.கோவிந்தசாமி,எம்.ஆர்.சுந்தரேசன்,வாசுகி தங்கமணி,ஏ.சௌரிராஜன்,கே.நாகரத்தினம்,எஸ்.வீரமணி,சி.கொளஞ்சிநாதன்,எஸ்.என்.துரைராஜ், பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார் தர்னாவின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் த.ஆபிரகாமிடம் கொடுத்தனர்.அதில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்,இத்திட்டம் தொடங்கப்படவில்லையென்றால் விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக