செவ்வாய்

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 26:ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெருமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா பேசியது:பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதுடன், அதில், அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அணைக்கரை பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி. ரமேஷ், டி. ரமேஷ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், தா.பழூர் ஒன்றியச் செயலர் எஸ். ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலர் வீ. ஞானசேகரன், ப. நிக்கோலஸ், கல்யாணசுந்தரம், பார்த்தீபன், எஸ்.ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நன்றி : தினமணி  

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=294070&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக