வெள்ளி

விக்கிரவாண்டி ஹோட்டல் உதயாவின் அராஜகம்

அதாவது ஜெயங்கொண்டம் to சென்னை பேருந்து பயண அனுபவங்களில் சில‌

ஒரு நாள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பேருந்து ஒன்று விக்கிரவாண்டி ஹோட்டல் உதயாவில் இரவு 2 மணிக்கு வந்து நின்றது.அந்த ஹோட்டலில் urine pass பண்ண 2 ரூபாய் வசூல் செய்கின்றார்கள்.அரசு நியாய விலை கடைகளில் 1 ரூபாய்க்கு அரிசி விற்கின்றார்கள்.மற்றும் அந்த ஹோட்டலில் குறைந்தது 50 (2 பரோட்டா,குருமா)ரூபாய் இருந்தால் தான் சாப்பிட முடியும்.வாட்டர் பாட்டில் (water pottle) விலை 13 ரூபாய் தான் ஆனால் 18 ரூபாய்க்கு விற்கின்றார்கள்.காபி (coffee) 8 ரூபாய்க்கு விற்கின்றார்கள்.கழனி தண்ணியில சக்கரையை கலந்தது மாதிரி இருக்கிறது.அங்கே கூர்க்கா மாதிரி ஒரு ஆள் நின்று கொண்டு திறந்த வெளியில் urine pass பண்ண சென்ற ஆட்கள் எல்லோரையும் வாடா போடா என்று திட்டி கொண்டு நின்றான்.அதனால் நமது சக பயணி ஒருவர் அவனை எப்படி எல்லோரையும் திட்டலாம் என்று கேட்டதற்கு அவரது கைகளில் பிராந்தி பாட்டிலால் கீறி விட்டான்.மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் சேர்ந்து கொண்டு உருட்டு கட்டைகளால் அந்த பயணியை தாக்கினர்.அடுத்து எதிர்த்து கேட்ட மற்ற பயணி ஒருவரை பெரிய கட்டைகளால் மண்டையை உடைத்தனர்.மற்றும் அந்த நேரத்தில் யாரெல்லாம் எதிர்த்து கேட்கிறார்களோ அவர்களையும் தாக்கினர்.உடனே நான் பத்திரிக்கை நிருபர் போல எனது mobile camera மூலம் அடிவாங்கிய கை மற்றும் மண்டையில் காயம்பட்ட அவர்கள் இரண்டு பேரையும் photo எடுக்க முயன்றேன்.ஹோட்டல் ஊழியர்கள் என்னையும் மிரட்டினார்கள்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ஹோட்டல் ஊழியர்கள் சமாதானபடுத்தி விட்டார்கள்.இலவசமாக சாப்பாடு பிரியாணி சாப்பிடுகின்றார்களே,அதனால் ஹோட்டலுக்கு சாதகமாக நடந்து கொண்டார்கள்.இருந்தும் பேருந்து பயணிகளில் சிலர் பேருந்தை police station போக சொன்னார்கள்.நமது ஓட்டுனர் அவர்கள் விக்கிரவாண்டி police station ல்
நிறுத்தாமல் திண்டிவனம் police station ல் நிறுத்தினார்.அங்கே நமது பிரச்சனையை சொன்னவுடன் அங்கு உள்ள காவல் துறை அதிகாரி அவர்கள் ஓட்டுனரை திட்டி விக்கிரவாண்டி police station க்கு திரும்ப போக சொன்னார்கள்.அந்த நேரத்தில் திரும்ப போவதற்கு யாருக்கும் சம்மதம் இல்லை.மற்றும் பயணிகள் ஓட்டுனரை ஏன் இந்த மாதிரி ஹோட்டலில் நிறுத்துகின்றீர்கள் என்று கேட்டால் எங்களுடைய மேலதிகாரி இங்கே தான் நிறுத்த சொல்கிறார்கள் என்று சொல்கிறார்.அதனால் அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் எனது பணத்தையும் செலவு செய்து முதலுதவி பண்ணிகொண்டு சென்னை நோக்கி பயணம் செய்தோம்.விக்கிரவாண்டி ஹோட்டல் உதயா ஒரு ஆளும்கட்சி அரசியல்வாதியுடையது.

விக்கிரவாண்டி ஹோட்டல் உதயா ஆட்கள் சாலையில் செல்கின்ற அனைத்து பேருந்தையும் traffice police போல green மற்றும் Red color light வைத்துகொண்டு மடக்கி உள்ளே கொண்டு செல்கிறார்கள்.மக்களே என்ன செய்யலாம் இந்த மாதிரி அரசாங்க அதிகாரி,அரசியல்வாதி,ஓட்டுனர் மற்றும் நடத்துனரை.எல்லாமே இலவசமாக‌ பிரியாணி மற்றும் 500 அல்லது 1000 ரூபாய் எச்சில் காசுக்காக விலைபோகின்ற நமது மக்கள் இருக்கின்றவரை இந்தமாதிரி ஆட்களின் அராஜகம் தொடரதான் செய்யும்.