செவ்வாய்

மூலிகைகளின் ராணி "துளசி'

திருவள்ளூர் : மூலிகைகளின் ராணி என பெயர் பெற்ற துளசியை பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரம் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படுகிறது.வைட்டமின் ஏ, சி, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கும் துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் இருந்து கொசு விரட்டி, கிருமி நாசினி, தலைவலி, தொண்டைப் புண், அஜீண கோளாறு, வயிற்றுப்போக்கு மலேரியா போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதால் மூலிகைகளின் ராணி என்ற பெயர் துளசிச் செடிக்கு உண்டு.நடவு முறை:பொதுவாக விதைகள் மூலம் துளசி உற்பத்தி செய்யப்படும். மேட்டுப் பாத்தியல் முறையில் விதைகள் தூவி நாற்றங்கால் அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாளில் விதை முளைத்து வரும். 6 வாரங்கள் தயாரான நாற்றுக்களை 40 செ.மீ. ஷ் 40 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்து மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. இதற்கு மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே போதுமானது.அறுவடை: எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மைக் கொண்ட துளசிச் செடியின் முதல் அறுவடை 90 முதல் 95 நாளிலும், அடுத்ததாக 60 முதல் 75 நாளிலும் அதை தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை என்ற கணக்கில் அறுவடை செய்யலாம். எண்ணெய் எடுக்க அறுவடை செய்யும் போது பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் பூஜைகள், மாலை கட்டும் பலனுக்காக அறுவடை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரி மலை சீசனில் இம்மாவட்டத்தில் துளசியின் தேவை அதிகளவில் உள்ளது.பூஜை மற்றும் மாலை கட்ட பயன்படும் வகையில் அறுவடை செய்யப்படும் துளசி ஒரு கிலோ 25 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படும் துளசி கிலோ 40 வரை விற்கப்படுகிறது. ஆனால் எண்ணெய் எடுக்கும் விதத்தில் துளசி பயிர்கள் வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. தென் இந்தியாவில் எண்ணெய் பயன்பாடு அறுவடை மிகவும் குறைவாக உள்ளது. துளசி பயிர் குறித்த விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலரை 9444227095 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

நன்றி :தினமணி 
Source:http://www.dinamani.com

பயிரிடுவோம் பணம் தரும் பப்பாளி

கடலூரில் செழித்து வளர்ந்த பப்பாளி மரம்
கடலூர்: கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. பப்பாளி வெப்ப, மிதவெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது.தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன. மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன. இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது. ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும். அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம். பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம். பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம். உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும். பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.இதுகுறித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்குப்பம் கிராமத்தில் பழத்துக்காக பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயி ஜனார்த்தனம் கூறுகையில், "5 ஏக்கரில் பப்பாளி பயிரிட்டு இருக்கிறேன். ஏக்கருக்கு |70 ஆயிரம் வரை செலவாகிறது. |5 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. கடலூர் மாவட்ட அங்காடிகளிலேயே பழங்களை விற்பனை செய்கிறேன்" என்றார்.
 
நன்றி :தினமணி 
Source:http://www.dinamani.com

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி உண்ணாவிரதம்

அரியலூர், நவ.9-
அரியலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உண்ணாவிரத பேராட்டம் நடந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், பள்ளி குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வந்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும். கீழபழூர் பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் அழகுமுத்து, இளைஞர் அணி செயலாளர் ரமணிகுமார் மகளிரணி செயலாளர் மாலதி மற்றும் மகாதேவன், கலியமூர்த்தி, சின்னப்பன், கணேசன் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டார்கள்.


நன்றி  :மாலைமலர் 
Source: http://www.maalaimalar.com

சனி

சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்





கடலூர்: தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.  சோற்றுக் கற்றாழையில் அலோயின், அலோசோன் என்ற வேதிப் பொருள்கள் 4 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ளன. இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அலோவரா ஜெல், அழகுசாதனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  சூரிய ஒளியில் இருந்து வரும் கடும் வெப்பம், காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் தோலை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இது தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. எனவே சோற்றுக் கற்றாழையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள்கள் உலகம் முழுவதும் சருமத்துக்கான லோஷன்கள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.  வளரும் நிலை: 25 முதல் 45 செல்ஷியஸ் வெப்ப நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பிரதேசங்களில் சோற்றுக் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையான நிலங்களிலும் சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும் என்றாலும் தரிசுமண், மணற்பாங்கான நிலங்கள், பொறைமண் நிலங்களில் சிறப்பாக வளரும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது.  இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வறட்சியான பகுதிகளில் சோற்றுக் கற்றாழை வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, கிரீஸ், உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் சோற்றுக் கற்றாழையைப் பதப்படுத்தியோ, ஜெல் தயாரித்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.  இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடுகிறார்கள்.  விதைகள் இல்லை: சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற பருவகாலம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சோற்றுக் கற்றாழையில் பூக்கள் உற்பத்தியானாலும் அதன் மகரந்தங்கள் செயல் இழந்து விடுவதால், விதைகள் உருவாவது இல்லை. எனவே செடியின் பக்கக் கன்றுகளை பிரித்தெடுத்து, வளர்க்கப்படுகிறது.  இதன்படி, 3 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம், ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் நடவேண்டும். நிலத்தை இருமுறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட்டு, சிறு பாத்திகளில் சோற்றுக் கற்றாழை நடவேண்டும்.  இலை முதிர்ச்சி அடையும்போது, ஒரளவுக்கு வறட்சியான வானிலையில் இலைகளை சேகரித்தால், அதில் தரமான ஜெல் தயாரிக்க முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.  சோற்றுக் கற்றாழை இலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து கொண்டது. எனவே விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. எனவே வெகுவிரைவில் ஜெல் தயாரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏக்கருக்கு 15 டன்கள் வரை இலை கிடைக்கும்.  புதுவை மாநிலத்தில் உள்ள சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அலோவராவைக் கொள்முதல் செய்கின்றன.  திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி வட்டங்களில் சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலையும், தகுந்த நிலத் தன்மையும் உள்ளன. கொள்முதல் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அலோவரா நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார்கள் வேளாண்  துறையினர்.

நன்றி :தினமணி 

Source:http://www.dinamani.com/

பத்து ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

அரியலூர், நவ. 2: தமிழக மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இணைப்புக் கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை  விடுத்துள்ளார்.   இதுகுறித்து தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு திங்கள்கிழமை அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:   தமிழக மின்வாரியத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு தற்போது 30 நாள்கள் நோட்டீஸ்  கொடுக்கப்பட்டுள்ளது.   2005 ஆம் ஆண்டு காவிரி டெல்டா திட்டத்தின் கீழ், சுமார் 1500 விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு மோட்டார் பம்பு செட் வாங்கி திருமானூர், திருமழப்பாடி, கீழப்பழூர், ஏலாக்குறிச்சி, சுத்தமல்லி, தா. பழூர் ஆகிய உதவி மின் பொறியாளர்  அலுவலகங்களில் தயார் நிலையில் பதிவு செய்துள்ளனர்.   இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தவர்களாவர்.  எனவே, இவர்களுக்கும் தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க வேண்டும்.    ஜயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலக்கரி திட்டத்துக்காக  ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகையை தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்."சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம்'உடையார்பாளையம், நவ. 2:சிமன்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசு தாரர்களுக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன்.தமிழர் நீதிக்கட்சியில், செந்துறை ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் இணையும் விழா செந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  விழாவில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி தமிழர் நீதிக் கட்சியில் இணைந்த, புதிய  உறுப்பினர்களுக்கு கட்சியின் சால்வைகளை அணிவித்து அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன் பேசியது:    அரியலூர் மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை சுரண்டும் விதத்தில், சிமென்ட்  ஆலை தொழிலதிபர்கள், ஏழைகளின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி,  அரியலூரைச் சுற்றி 7 புதிய சிமென்ட் ஆலைகளை அமைத்துள்ளனர்.    இந்த ஆலைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆலைகளுக்காக நிலம் கொடுத்தோர்களுக்கு பணி  வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிமென்ட் மூட்டைகளின் விலைகளை  உயர்த்தியுள்ளனர். இதனால், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.   அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைகளில், மண்ணின்  மைந்தர்களுக்கும், ஆலைக்காக நிலம் கொடுத்தோர்க்கும் பணி வாய்ப்பு பெற்றுத்தர தமிழர் நீதிக் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர்.   விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலர் க. சம்பத் தலைமை வகித்தார். மாநில  அமைப்புச் செயலர் சி. மதியழகன், மாவட்ட தொழில் சங்கச் செயலர் முருகேசன்,  மாவட்டத் தலைவர் பெ. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   விழாவில் மாநில செய்தி தொடர்பாளர் மணிவண்ணன், மாநில கொள்கை பரப்புச்  செயலர் கொளஞ்சி, துணைப் பொதுச் செயலர் இரா. பாக்கியராசு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.   முன்னதாக, கட்சியின் ஒன்றியச் செயலர் ஏகாம்பரம் வரவேற்றார். செந்துறை  நகரச் செயலர் த. வேல்முருகன் நன்றி கூறினார்.

நன்றி :தினமணி 

source:http://www.dinamani.com/

ஞாயிறு

தமிழர் நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக். 1: சிமென்ட் ஆலைகளுக்காக நிலம் இழந்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழர் நீதிக் கட்சி சார்பில் அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   அரியலூரில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகள் மாவட்டம் முழுவதும் சிமென்ட் சாலை அமைத்துத் தர வேண்டும். அனைத்து சிமென்ட் தொழில்சாலைகளும் ஒரு மாதக் காலத்துக்குள் புகை எரிப்பான் கருவியைப் பொருத்தி மாசு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.   அரியலூரில் உள்ள அனைத்து சிமென்ட் தொழில்சாலைகளும் இணைந்து பொறியியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நிலத்தடி நீர்ப் பற்றாக்குறையை போக்கும் வகையில், நிலம் கொடுத்த பகுதி மக்களுக்கு ஆழ்க்குழாய் கிணறு அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.   முன்னதாக, அரியலூர் ஒற்றுமைத் திடலில் தொடங்கிய பேரணி மார்க்கெட் தெரு வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனர்- தலைவர் சுபா. இளவரசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் பாலையா, இரா. அறிவழகன், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.   கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மு. செல்வம், பொருளாளர் கருப்புசாமி, அமைப்புச் செயலர்கள் சி. மதியழகன், முருகேசன், தொழில்சங்கத் தலைவர் தென்னரசு, கொள்கை பரப்புச் செயலர் கொளஞ்சி, அரியலூர் மாவட்டத் தலைவர் க. சம்பத், சிமென்ட் பிரிவு தொழில்சங்கத் தலைவர் முருகேசன், நகரச் செயலர் த. சுதாகர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.   முன்னதாக, சுபா. இளவரசன் அளித்த பேட்டி:   அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலைகள் அமைவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இங்குள்ள விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெற்ற தொழில்சாலைகள் வெளிமாநிலங்களிலிருந்து ஆள்களை அழைத்து வந்து பணியமர்த்தி வருகின்றனர். இந்த நிலையை மாற்றி, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த படித்தவர்களுக்கு சிமென்ட் தொழில்சாலைகளில் வேலை வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் சிமென்ட் தொழில்சாலைகள் வேலை அளிக்கவில்லையெனில், அந்தத் தொழில்சாலைகள் முற்றுகையிடப்படும்.   தற்போது திமுக கூட்டணியில் தொடர்ந்து உள்ளேன். வரும் பேரவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கொடுத்தாலும் போட்டியிடுவேன். பேரவைத் தேர்தலில் வாய்ப்பு இல்லாமல் மேல்சபையில் வாய்ப்புக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.   திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் அதை வரவேற்பேன். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றார் சுபா. இளவரசன்.

நன்றி:தினமணி 

வியாழன்

Train To Karaikal-Jayamkondam-Ariyalur-Perambalur-Attur-Salem



This is proposed railway connectivity. But none of those blue (thick or sky) is approved so far. Government has to work fast to put Perambalur, Jayamkondam on railway map.
Karaikal-Attur line would be good for linking this upcoming SEZ and power plant at Jayamkondam.
1. Karaikal-Mayiladuthurai:
During British/Danish period, there was branch line from Peralam to Karaikal via Thirunallar. And there was another branch line from Mayiladuthurai to Tranquebar. But railways has abandoned those lines long back. Now they should make extend the Nagore-Karaikal line from Karaikal to Mayiladuthurai via Thirunallar, Thirukadaiyur and Tharangambadi.
2. Mayiladuthurai/Chidambaram-Jayamkondam line:
If railway has to lay Mayiladuthurai-Jayamkondam line, then they have to construct a gigantic bridge on Kollidam rives at Anaikarai. The bridge itself will consume hundreds of crores for such line. So they have proposal for Chidambaram-Jayamkondam line
3. Jayamkondam-Ariyalur-Perambalur:
This should be much possible one to connect Jayamkondam upcoming power plants with Central TN hub Trichy via Ariyalur and it has to go upt Perambalur to connect the SEZ with Karaikal port.
4. Perambur-Attur:
This line is needed so that Perambalur will not fall under branch line category. And in other way it will connect Mettur power plant with Karaikal port is short route and it will also open connection for Bangalore/Hosur/Salem/Erode/Tiruppur/Coimbatore with Perambalur SEZ.
Karaikal-Attur and Avadi-Tiruvanamalai are the important lines needed for the state as of now. Both the lines are not even in planning stage.
Road connection is so poor that it has to take single or two lane SH.

நன்றி: http://babu049.wordpress.com/2010/04/09/train-to-karaikal/

http://indianrailways.informe.com/forum/new-line-between-salem-and-karaikkal-dt398.html

துல்லியப் பண்ணையில் வாழை விவசாயம்! ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் வரை லாபம்



கடலூர்: தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. உலக அளவில் 72.5 மில்லியன் டன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு 21.77 சதவீதம். தமிழ்நாட்டில் பூவன், மொந்தன், ஏலக்கி, செவ்வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, நேந்திரம் போன்ற வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு வாழை மரத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயிகள் தற்போது வாரம் ஒரு முறை அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். இதனால் தண்ணீர் செலவு மிகஅதிகம். தேவையை விட 5 மடங்கு தண்ணீர் செலவழிக்கப்படுவதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.துல்லிய பண்ணை விவசாயத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் செலவை ஐந்தில் ஒரு பகுதியாகக் குறைக்க முடியும், அதனால் உற்பத்தியை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என்பதும் வேளாண்துறையின், புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள்.வேளாண் தொழிலுக்கு ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுவரும் இந்தக் காலத்தில், சொட்டுநீர் பாசனம் முறையை கடைப்பிடிப்பதால் வேலையாள்களின் தேவை பெருமளவுக்குக் குறைந்துவிடும். தேவைக்கு ஏற்ப சிக்கனமாக  உரமிட முடியும். தனியாக சேமிப்புத் தொட்டி ஒன்றை அமைத்து, உரத்தை அதன்மூலம் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வழியாகவே பயிருக்கு அளித்துவிட முடியும்.தமிழ்நாட்டில் வாழை விவசாயத்தில் துல்லியப் பண்ணை விவசாய தொழில்நுட்பம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் துல்லியப் பண்ணை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துல்லியப் பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியமும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.மானியம் இதுகுறித்து கடலூர் தோட்டக் கலைத்துறை வேளாண் துணை இயக்குநர் கனகசபை கூறுகையில், ""துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொண்டால், வாழைப் பயிருக்கு ஹெக்டேருக்கு மத்திய அரசு மானியம் ரூ.37,440-ம், மாநில அரசு மானியம் ரூ.11,200 மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பாரம்பரிய விவசாயத்தில் வாழைப் பயிரில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. ஆனால் துல்லியப் பண்ணை விவசாயம் மூலம் ரூ.3.58 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.  ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில் வாழை விவசாயம் புதிய தொழில் நுட்பங்களுடன் அதிக லாபம் ஈட்டும் சிறந்த தொழிலாக மாற்றப்பட்டு இருக்கிறது.மேலை நாடுகளில் வாழைத்தார்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நேராக சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று விடுகின்றன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பழுக்க வைக்கப்பட்டு, சூப்பர் மார்கெட்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு எப்போதும் புதிய வாழைப் பழங்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழைப் பழங்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே பழுக்க வைக்கப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.இதனால் வாழை விவசாயிகளுக்கு ஒரே சீரான விலை கிடைக்கிறது. அத்தகைய புதிய தொழில் நுட்பங்களுக்கு தமிழக விவசாயிகளும் மாறவேண்டும். அதற்கு முதல் கட்டமாக துல்லிய பண்ணை விவசாயத்தை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.புதிய தொழில்நுட்பம்வாழை விவசாயத்தில் மகசூலாக வாழைப் பழத்தை மட்டுமே விவசாயிகள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். வாழை மட்டைகளில் இருந்து காகிதம், நார்களை பயன்படுத்தி பைகள் உள்ளிட்ட கலைப்பொருள்கள் தயாரிக்க முடியும். வாழைத் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல் போன்றவற்றுக்கு  நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வாழைத் தண்டு மற்றும் பூவில் இருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்றும் வாழையில் புதிய தொழில்நுட்பங்கள் தெரிவிக்கின்றன.வாழைப் பழங்களை ஜாம், பெüடர் ஆகவும்  தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது.துல்லியப் பண்ணை விவசாயம் குறித்து கடலூர் ராமாபுரம் முன்னோடி வாழை விவசாயி ஞானசேகரன் கூறுகையில், ""சூறாவளிக் காற்று ஏற்படாவிட்டால் கடலூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் லாபகரமானது. தண்ணீர் தேவையை குறைக்கவும், வேளாண் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் துல்லியப் பண்ணை விவசாயத்தைப் பின்பற்றி, சொட்டு நீர் பாசனம் முறையை ஒரு ஹெக்டேரில் பின்பற்ற முடிவு செய்து இருக்கிறேன். இதன்மூலம் 40 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

நன்றி : தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=303751&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82.3.50%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

சேலம் இரும்பாலை-நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை: கருணாநிதி கோரிக்கை

சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இரும்புத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் [^] கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள இரும்பாலைக்கு 4,000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆலை உருவாக்கப்பட்டது. நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்ததன்பேரில் மக்கள் நிலம் வழங்கினார்கள்.

இதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகமும் அமைக்கப்பட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த மாதம் 3 மற்றும் 27ம் தேதிகளில் ஆலை முன்பு போராட்டம் [^] நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி நிலம் கொடுத்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தொகுதி எம்.எல்.ஏ. ராஜா, அரசு அதிகாரிகள் இரும்பாலை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்:

1. இரும்பாலையில் வேலை வழங்க சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்க வேண்டும்.

2. அனைத்து வேலை வாய்ப்புகளும் இதன் மூலமே நிரப்பப்பட வேண்டும்.

3. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கான வயது உச்ச வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.

4. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை பணி காலத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும். 99 வருட காலம் என்று இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.

5. தற்போது 78 பேரை நியமனம் செய்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் 78 பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித் தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்து பொகாரோ இரும்பு ஆலை, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை ஆகியவற்றில் வேலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் வயது வரம்பில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தகுதியான ஆட்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டும் மாநில அளவில் தேர்வு செய்ய வேண்டும்.

எனவே, இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நன்றி:Thatstamil

Source: http://thatstamil.oneindia.in/news/2010/05/01/workers-support-dmk-government-stalin.html

வெள்ளி

உத்தரப் பிரதேச மாதிரியை பின்பற்றுங்கள்: ராமதாஸ்



சென்னை, செப். 8: விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றும் உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிறது. நெல் உள்பட உணவு தானியங்களின் உற்பத்த்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை அபகரிக்கும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாயமாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காவும் நிலம் கையகப்படுத்தலுக்கும், நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கும் புதிய கொள்கையை உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ளது.அதன்படி, நில உரிமையாளர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆண்டுத் தொகை வழங்கவும், அதனை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை விரும்பாதவர்கள் ஆண்டுத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் கையப்படுத்தப்பட்டால், நிலத்தின் மதிப்பில் 25 சதவீத அளவுக்கு நிகரான தொகையை அந்த தனியார் நிறுவனத்தின் பங்குத் தொகையாக பெறுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றுகிறது.அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் நிலத்தில் 7 சதவீத பரப்புள்ள பகுதி குடியிருப்பு நோக்கத்திற்காக நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிலத்தின் குறைந்தபட்ச பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதில் 17.5 சதவீதம் நில உரிமையாளர்களுக்கு வழங்க வகை செய்யும் புரட்சிகரமான திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் தங்களது மறுப்பைக் கூட பதிவு செய்ய முடியாது. இழப்பீடு என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. நிலத்தை பறிகொடுப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் இழப்பீட்டை மட்டுமே பெற முடியும் என்று சட்டத்தில் உள்ளது. இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். நிலங்களை இழக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான புதிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.இப்படி எடுத்துச் சொல்வதால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக பழிசுமத்தாமல் உத்தரப்பிரதேச அரசின் வழியில் தமிழக விவசாயிகளுக்காக புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி :தினமணி 


source:http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0baa%u0bcd+%u0baa%u0bbf%u0bb0%u0ba4%u0bc7%u0b9a+%u0bae%u0bbe%u0ba4%u0bbf%u0bb0%u0bbf%u0baf%u0bc8+%u0baa%u0bbf%u0ba9%u0bcd%u0baa%u0bb1%u0bcd%u0bb1%u0bc1%u0b99%u0bcd%u0b95%u0bb3%u0bcd:+%u0bb0%u0bbe%u0bae%u0ba4%u0bbe%u0bb8%u0bcd&artid=300298&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

பண்டிகைக் கால பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயிகள்

கம்பு, கேழ்வரகு கதிர்களை விற்பனைக்காக கத்தைகளாகத் தயார் செய்யும் பணி.
புதுச்சேரி,  செப்.  9:  புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் விநாயகர் சதுர்த்திக்காக பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பழங்களுடன், தானியங்களின் கதிர்கள் விநாயகருக்குப் படைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு கம்பு, கேழ்வரகு போன்ற தானிய கதிர்களைத் தேடிக் கொண்டு வீட்டில் வைத்துப் படைத்தனர்.இப்போது அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. மேலும் அது எங்கு கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் கிடைக்கும் பொருளைக் காசு கொடுத்து வாங்கிச் செல்ல தயாராகி விட்டனர். இதைப் பயன்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மற்றும் அன்றைய தினம் படைப்பதற்கான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.10 ஆண்டுகளாக கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்து வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி து. பாண்டுரங்கன், இந்த ஆண்டு முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கருத்தில் கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். 2 நாள்களுக்கு முன்பு இதை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.அரை காணி அளவில் அவர் இதைச் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மக்காச்சோளம் ஒரு கதிர் ரூ.1 என்ற விலையில் வியாபாரிகளிடம் கொடுத்துள்ளார். ஒரே வியாபாரி இவரிடம் இருந்த 7,175 கதிர்களையும் வாங்கிச் சென்றுள்ளார். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதிர்கள் இருந்தாலும் வியாபாரிகள் வாங்கிச் செல்ல தயாராக இருக்கின்றனர் என்றார் பாண்டுரங்கன்.10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்காக கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வரும் சரசு, நேரடியாக புதுச்சேரி மார்க்கெட் பகுதியில் இதைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார். நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்.அவரது மகன் பார்த்திபன் கூறுகையில், உண்மையில் விநாயகர் சதுர்த்திக்காகச் சாகுபடி செய்து இது போன்று விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்கள் வயலில் இன்னும் அறுவடை செய்யவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் அறுவடை செய்து வெள்ளி, சனிக்கிழமை மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல உள்ளோம். இந்த ஆண்டு மழையின் காரணமாக ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என்பதை கணக்கிட்டு சரியாக 3 மாதத்துக்கு முன்புதான் கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வோம். 3 மாதத்தில் பெரிய அளவில் இது போன்ற சாகுபடியால் பணம் பார்க்க முடிகிறது.  எங்கள் வயலில் நாவற்பழம் மரமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே பழங்கள் விற்பனை செய்து முடிந்துவிட்டன என்றார்.14 ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த மழையால் எங்களுக்கு நஷ்டமாகதான் இருக்கும். விநாயகர் சதுர்த்தி முடிந்தால்தான் அது தெரியவரும். எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரே நாளில் 3 மடங்கு அளவுக்கு லாபம் பார்க்கின்றனர் என்றார் விவசாயி வி. சிவராமன்.வயலில் கம்பு, கேழ்வரகு அறுவடை செய்து கொண்டிருந்த அவர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.கம்பு ஒரு கதிர் ரூ.1 என்ற விலையிலும், கேழ்வரகு 50 பைசா என்ற விலையிலும் இப்போது விற்பனை செய்துள்ளதாகவும், மழையின் காரணமாக கம்பு மற்றும் கேழ்வரகு திடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.இவருடைய மனைவி தில்லையம்மாள் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சாகுபடி செய்யும் கம்பு கதிரின் மேனி அழகாக இருக்கும். இந்த ஆண்டு எங்கள் மழை பழிவாங்கிவிட்டது. இல்லையென்றால் உண்மையில் நல்ல லாபம்தான் கிடைக்கும் என்றார்.

நன்றி :தினமணி 


source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=300776&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சனி

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்

ஜெயங்கொண்டம், செப். 1: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனர்  தலைவர் சுபா. இளவரசன்.  ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில்   புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சுபா. இளவரசன் பேசியது:    நிலக்கரி மின் திட்டம் தொடங்குவதாக  அறிவிக்கப்பட்டு, 18 சிற்றூர்களின் நிலங்கள் திட்ட  அலுவலகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 15  ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நிலக்கரி திட்டத்தில் நிலமிழக்கும் அனைத்து மக்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும்.    சொத்துகளை இழக்கும் மக்களுக்கு ஏக்கருக்கு | 10  லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அனைத்து மக்களுக்கும்  கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும். அமைக்கப்படும் குடியிருப்புகள் மின் திட்ட வளாகத்துக்குள் வர வேண்டும்.   இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும்  அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தில் வேலை வழங்க  வேண்டும். நிலக்கரி திட்டத்துக்குத் தேவையான தொழில்பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று காரணம் காட்டி இப் பகுதி  மக்களுக்கு வேலை மறுப்பதை தவிர்க்க முன்னேற்பாடாக,  இந்தப் பகுதியிலேயே ஓர் தொழில்பயிற்சி நிலையம் அமைத்து  நிலமிழக்கும் குடும்பங்களுக்குத் தேவையான தொழில்பயிற்சியை அளிக்க வேண்டும்.   இத் திட்டத்தால் நிலம் வழங்கியுள்ள குடும்பங்களுக்கு  வேலை கொடுத்ததுபோக, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள தகுதியுடைய அனைவருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.   நிலமிழக்கும் விவசாயிகள் அனைவரின் அனைத்து அரசுக்  கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.    நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியாகும் நீரை வறண்டப்  பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.    இத் திட்டத்தால் பாதிக்கப்படும் நிலமற்ற கூலித்  தொழிலாளர்களுக்கும், நெசவுத் தொழிலாளர்களுக்கும் உரிய  முன்னுரிமை வழங்க வேண்டும்.    கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசின்  சலுகைகளைப் பெறமுடியாத நிலையில், அப் பகுதி  மக்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையை இந் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், இந்தத் திட்டம்  தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இளவரசன்.      ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலர் (மே)இரா. அறிவழகன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலர் மகேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் மு. செல்வம், மாநிலப் பொருளர் கருப்புசாமி, மாநில கொள்கைப் பரப்புச் செயலர் கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் நகரச் செயலர்  கலியமூர்த்தி நன்றி கூறினார்.     ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய தீர்மான நகலை ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட தனி  வட்டாட்சியர் உதயகுமாரிடம், சுபா. இளவரசன் வழங்கினார்.

நன்றி :தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=297001&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

செவ்வாய்

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 26:ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெருமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா பேசியது:பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதுடன், அதில், அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அணைக்கரை பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி. ரமேஷ், டி. ரமேஷ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், தா.பழூர் ஒன்றியச் செயலர் எஸ். ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலர் வீ. ஞானசேகரன், ப. நிக்கோலஸ், கல்யாணசுந்தரம், பார்த்தீபன், எஸ்.ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நன்றி : தினமணி  

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=294070&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!

காஞ்சிபுரம்,  ஆக.20: இலவச மின்சாரம், பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் என்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவருகின்றனர். பாரம்பரியமான விவசாயத் தொழிலை விடமுடியாமலும், விட மனமில்லாலும் பல விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். ÷மாவட்ட நிர்வாக கணக்கின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,45,966 ஹெக்டேரில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேரில் கரும்பு விவசாயமும், 28,766 ஹெக்டேரில் வேர்கடலை விவசாயமும் நடைபெறுகிறது. இதில் மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே மின்மோட்டார் வைத்திருந்த விவசாயிகளும் லாபம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டீசல் என்ஜின் வைத்திருந்த பல விவசாயிகள் |50 ஆயிரம், | 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி புதிய மின் இணைப்புகளை பெற்றனர். இப்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மோட்டாரும் வழங்கப்பட உள்ளது. ÷ஆனால் | 50 ஆயிரம் செலுத்த முடியாமல் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு இன்னும் ஏழை விவசாயிகள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் டீசல் என்ஜினை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ÷அடிக்கடி டீசல் விலை உயரும்போது இந்த விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே விவசாயத்தில் லாபகரமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் டீசலை என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இன்னும் கூடுதல் ஆகிறது. ÷மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளைப் போல் டீசல் என்ஜின் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அரசு உதவ வேண்டியது அவசியம். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதுபோல் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர் இவர்கள். ÷இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் த.தமிழினியனிடம் கேட்டபோது அவர் கூறியது: டீசல் என்ஜின் வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளை டீசல் விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அட்டை வழங்கி எவ்வளவு நிலம் வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ÷இப்போது மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற டீசல் என்ஜினை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின் மோட்டார்களை சாத்தியமுள்ள இடத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் மோட்டாரை இயக்க முடியும் என்றார்.

நன்றி : தினமணி  


Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=290369&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

வெள்ளி

ஜெயங்கொண்டம் மின் திட்டம்







சென்னை, மே 27: கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) சாதனை படைத்துள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 54 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2490 மெகாவாட். இதில் 1,153 மெகாவாட் அளவு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. 


மின்னுற்பத்தியில் சாதனை:கடந்த நிதி ஆண்டில் (2009-10) மட்டும் ரூ. 4,121 கோடி அளவுக்கு வணிகம் செய்துள்ளது. நிகர லாபமாக ரூ. 1,247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 51.9 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான திட்டமிடுதல் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை தொழிலகங்களில் பெற்றதன் மூலம் அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. என்.எல்.சி. தனது 4 சுரங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 223 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதே போல அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,765 யூனிட் மின்னுற்பத்தி செய்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தி அளவாகும்.  கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டு,ரூ. 167.77 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி ஈவுத் தொகையாக 10 சதவீதம் வழங்க என்.எல்.சி. இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பங்கு ஈவுத் தொகைக்காக ரூ. 335.54 கோடி செலவிடப்படும். 

கட்டுமான திட்டங்கள்:நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தில்  250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றொரு 250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு வரும் ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி இது தொடங்கி வைக்கப்படும். மற்றொரு மின்னுற்பத்திப் பிரிவு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும். 



காற்றாலை மின்னுற்பத்தி:
தமிழகத்தில் செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலைகளை நிறுவி 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.நெய்வேலி நகரியத்தில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தி எப்போது? 


தமிழக மின் வாரியமும், என்.எல்.சி.யும் இணைந்து கூட்டு முயற்சியாக என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தை அமைத்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடியில் ரூ. 5 ஆயிரம் கோடி (ஆயிரம் மெகாவாட் திறனுள்ள) புதிய அனல் மின் நிலையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தியின்போது கொதிகலன்களுக்கு எரிபொருளாக பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் 2012-13-ல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 4290 மெகாவாட் அளவுக்கு உயரும். 

ஜெயங்கொண்டம் மின் திட்டம்:தமிழகத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கவும், 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 


புதிய திட்டங்கள்:அதிநவீன மின்னுற்பத்தி திட்டத்தின் கீழ் சென்னை அருகே செய்யூரில் (4,000 மெகாவாட்) ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுதல், உற்பத்தி, நிர்வகித்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 
இதுதவிர ரூ. 2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மற்றொரு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதற்கு 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போதிய ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.சுற்றுச்சூழல் விதிகளை என்.எல்.சி. மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறது என்றார் அன்சாரி. என்.எல்.சி. இயக்குநர்கள் கே. சேகர் (நிதி),ஆர். கந்தசாமி (திட்டங்கள்) உடனிருந்தனர்
நன்றி : தினமணி

புதன்

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?





ஜெயங்கொண்டம்,மே 16:அரியலூர் மாவட்ட மக்களின் மிகப் பெரிய வாழ்வாதாரத் திட்டமான அனல் மின் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் பகுதியில் 80 அடி முதல் 330 அடி வரை தரமான பழுப்பு நிலக்கரி படிமம் சுமார் 115 கோடி  டன்னுக்கு மேல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதைப் பயன்படுத்தி அனல் மின் திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை,கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக அரசின் அன்றைய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்டார்.
இந்தத் திட்டத்துக்காக ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து 8,473 ஏக்கர் நன்செய் நிலங்களும் 1,053 ஏக்கர் புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
1991 ஆம் ஆண்டு மாநில அரசின் டிட்கோ நிறுவனம் மூலம் சுமார் ரூ.63 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைக் கைவிடும் நிலை உருவானது.இந்நிலையில்,மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முயற்சியால்,இந்தத் திட்டம் மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, இதற்கென மத்திய அரசு மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுநாள் வரை 11,489 நில உரிமையாளர்களில் 10,325 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மொத்தம் ரூ.36 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பெண்ணாடம்,தனவாய் போன்ற கிராமங்களில் ஓர் ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் வழங்கி,தனியார் சிமென்ட் ஆலைகள் நிலங்களைத் தன்வசப்படுத்தி உள்ளன.
இதை ஒப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். மேலும்,நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு,வீடுகளை இழந்தவர்களுக்கு அடிப்படை  வசதிகளுடன் கூடிய வீடுகள்,கல்விக் கூடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்,கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைக் கடுமையாக எதிர்த்து,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு,நிலம் இழந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு தான் ஒருபிடி மண்ணைக்கூட அள்ள முடியும் என்று  கூறி​னர்.
இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட வேண்டும் என்று 9,882 விவசாயிகள் வழக்குத்  தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை  விசாரிக்க அரசு சார்பில், இரு சார்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே,ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து,பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணி,அனல் மின் திட்டப் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி தொடங்கி,மின் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:தினமணி
Source : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=243292&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=ஜயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?

திங்கள்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா

ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை துவங்க கோரி பொதுமக்கள் போராட்டம் 
ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வலியுறுத்தி 17 கிராமங்களில் பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம்  ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும்.திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வீடுதோறும் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.அல்லது இத்திட்டத்தை கைவிட்டு விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்கி நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என ஜெயந்கொண்டம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை   நிறைவேற்ற  அரசுநடவடிக்கை  எடுக்கவில்லை .அதை கண்டித்தும்  கோரிக்கைகளை விரைவாகக் நிறைவேற்றகோரியும் ஜெயந்கொண்டம் பகுதியிலுள்ள  உடையார்பாளையம்,செங்குந்தபுரம்,மேலூர்,இலையூர்,வரியங்காவல்,தேவனூர்,கொளத்தூர்,கல்வெட்டு,கீழகுடியிருப்பு,கல்லாத்தூர்,தண்டலை,புதுக்குடி,கண்டியங்கொல்லை உட்பட 22 கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடன​டியாகச் செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற தர்னாவுக்கு ஆண்டிமடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.தர்னாவை விவசாய சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசினார்.
இப்போராட்டத்தில் எஸ்.தங்கதுரை, எம்.தங்கராசு,ஜெ.கோவிந்தசாமி,எம்.ஆர்.சுந்தரேசன்,வாசுகி தங்கமணி,ஏ.சௌரிராஜன்,கே.நாகரத்தினம்,எஸ்.வீரமணி,சி.கொளஞ்சிநாதன்,எஸ்.என்.துரைராஜ், பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார் தர்னாவின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் த.ஆபிரகாமிடம் கொடுத்தனர்.அதில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்,இத்திட்டம் தொடங்கப்படவில்லையென்றால் விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வியாழன்

பூச்சிகளை விரட்டும் "அரப்பு மோர்' கரைசல்

சிதம்பரம், மார்ச்  31: இயற்கை வேளாண் பண்ணைகளை கிராமங்களில் உருவாக்கி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
÷இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.
÷தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
÷இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
÷விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
÷பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.÷குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
÷அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
÷எனவே குறைந்த செலவில், காலத்தில் விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:தினமணி
 
 

காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க யோசனை

அரக்கோணம், மார்ச் 31: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தொடர்ந்து விளைச்சல் கிடைக்கும் வகையில் கால இடைவெளியை பின்பற்றி பயிர் சாகுபடி செய்தால் நல்ல விலைக் கிடைக்கும் என்று தோட்டக் கலைத் துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் பரசுராமன் கூறினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பொன்னை உபவடி நீர்ப்பகுதி விவசாயிகளுக்கான இலவச இடுபொருள் வழங்கும் விழா அரக்கோணத்தை அடுத்த காவனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பரசுராமன் பேசியது:

காய்கறிகளை பயிர் செய்வோர் தங்களின் நிலத்தை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் முதல் சாகுபடி தொடங்கிய 15 நாள் கழித்து அடுத்த பகுதியில் சாகுபடியை தொடங்க வேண்டும்.

 இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை பின்பற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளால் ஆண்டு முழுதும் காய்கறிகளை தொடர்ந்து விற்பனைச் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

 இதன் மூலம் தொடர்ந்து நல்ல விலையும், வருவாயும் கிடைப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு பிரச்னையை சந்திக்கும் சூழல் ஏற்படாது.

  விற்பனை சந்தையின் தேவைக்கும் குறைவாக காய்கறிகள் செல்லும்போது அவற்றுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார் பரசுராமன்.

கூட்டத்துக்கு ஏரிபாசன சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், தோட்டக்கலைத் துறை அரக்கோணம் உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி, நெமிலி உதவி இயக்குநர் விஜயராம், காவனூர் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்...

பண்ருட்டி, மார்ச் 31:   முந்திரி உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களை கண்டறிந்து, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை பெறலாம் என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 
பண்ருட்டி வட்டத்தில் சுமார் 16,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.   முந்திரியில் அதிக மகசூல் பெறுவது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது:  விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தோப்புகள், வயதான மற்றும் உற்பத்தி திறன் குறைந்த தோப்புகள் இருத்தல், மண் வளம், மரங்களை பராமரிப்பு செய்தல் குறைவு, உரமிடாமை, பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமையால் முந்திரி உற்பத்தி திறன் குறைகிறது.  
முந்திரியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது தேயிலைக் கொசு பூச்சியாகும். இப்பூச்சியால் 25 சதவீதம் தளிர், 30 சதவீதம் பூங்கொத்து மற்றும் 15 சதவீதம் இளங்கொட்டை பருவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 
முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து, இலைகள் நன்றாக நனைந்து ஒழுகும்படியும், உள்வாட்டத்தில் சிம்புகளிலும், கிளைகளிலும் பரவலாக தெளிக்க வேண்டும். 
எக்காரணம் கொண்டும் பைரித்திராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரியில் தேயிலை கொசுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
முந்திரியை தாக்கும் பூச்சிகளில் தேயிலைக் கொசுவும் ஒன்றாகும். இது முந்திரியில் அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவிக்கும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி பூக்கும் தருவாயில் உள்ளது. இத்தருனத்தில் இப்பூச்சியானது பூங்கொத்து மற்றும் பிஞ்சுகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை காய்ந்து கருகிவிடச் செய்கின்றன. பாதிப்பு அதிகமானால் தாக்குண்ட கிளைகள் முழுவதும் கருகிவிடும்.  எனவே, இப்பூச்சியை முந்திரி பூக்கும் பருவத்தில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35இசி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி(அ) குளோர்பைரிபாஸ் 20இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அத்தோடு பூக்கள் கொட்டுவதை தடுக்க இந்த மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கவும். பின்னர் முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சதவீத நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடித்தோமானால் முந்திரியில் அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
 நன்றி:தினமணி 
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206184&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்



தமிழகத்தில் முந்திரி ஒரு பணப்பயிராக சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் முந்திரிபருப்பு மட்டுமே அதிக வர்த்தக வாய்ப்புள்ள பொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிப்பழம் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலையே நடைமுறையில் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் மதிப்பு கூடிய பொருள்களான முந்திரி மிட்டாய், முந்திரி ஊறுகாய், முந்திரிஜாம் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.
முந்திரி ஆப்பிள்: முந்திரியின் பழத்தை பல மாநிலங்களில் "முந்திரி ஆப்பிள்' என்ற பெயரில் அழைக்கின்றனர். முந்திரி பழம் வெகு வேகமாக பதப்படுத்தப்படுவதால் கெட்டுவிடும் தன்மை கொண்டது.
இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் இருந்த தயாரிக்கப்படும் மதிப்பு கூடிய பொருள்களை பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்து ஒரு நுகர்வு
உணவு பொருளாக விற்பனை செய்ய முடியும்.
முந்திரி ஆப்பிள் மிட்டாய்: விவசாயிகள் நல்ல தரமான அழகான முந்திரி ஆப்பிள் பழங்களை மிட்டாய் தயாரிக்க தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேல் தோலை நன்றாக அகற்றிவிட்டு சர்க்கரை கரைசலில் நன்றாக வேக வைக்க வேண்டும். ÷மிருதுவான தன்மையை அடைந்தவுடன் மேலும் சர்க்கரை கரைசலின் அடர்தன்மை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மிட்டாயை 2 வார கால அளவில் சர்க்கரை நீர் வடியும் வரை காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்க 2 அல்லது 3 வார காலமாகும்.
ஒரு கிலோ முந்திரி பழத்திலிருந்து 745 கிராம் வரை முந்திரி ஆப்பிள் மிட்டாயை தயாரிக்க முடியும். அதிகளவு வைட்டமின்-சி சத்துக்கள் கொண்ட முந்திரி ஆப்பிள் முட்டாய் 50 கிராமின் விலை ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிஜாம்: முந்திரி பழங்களை நன்றாக கழுவி உப்பு கரைசலில் 2 அல்லது 3 நாள்களுக்கு முக்கி மேல் தோலை அகற்றிவிட வேண்டும். பின்னர் முந்திரி பழத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, வேக வைத்து கூழாக மாற்றி மாம்பழ கூழ் உடன் கலக்க வேண்டும்.
பின்னர் போதுமான சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் கலந்து முந்திரி ஜாம் தயாரிக்கலாம். அதிகளவு வைட்டமின் "சி' சத்துள்ள முந்திரி ஜாமை ஆறுமாத காலம் வரை வைத்து விவசாயிகள் சந்தைகளில், வணிக வளாகத்தில் விற்பனை செய்ய முடியும். தற்போது 350 கிராம் கொண்ட முந்திரி ஜாம் ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரி ஊறுகாய்: நன்றாக முற்றிய முந்திரி பழங்களை தோட்டத்திலிருந்து விவசாயிகள் காய் மற்றும் பூக்களை சேதப்படுத்தாமல் பறிக்க வேண்டும். பின்னர் நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் உப்பு கரைசலில் போட்டு நன்றாக மூழ்க செய்ய வேண்டும். இதனால் சில கசப்புகள் மற்றும் வாசனைகள் வெளியேறிவிடும். பின்னர் உப்பு கரைசலில் இருந்து பழத்துண்டுகளை எடுத்து மீண்டும் நன்றாக கழுவி, ஊறுகாய் செய்வது போல் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய்யில் ஊறுகாய் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் முந்திரி ஊறுகாய் 250 கிராம் ரூ.25 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பயிற்சி: ""முந்திரி மதிப்புக்கூடிய பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய தொழில்நுட்ப பயிற்சிகள் மேற்கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கேரளத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி நிலைய உற்பத்திக் கூடத்தை அணுகலாம்'' என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.
÷தொடர்பு முகவரி: இயக்குநர், முந்திரி ஆராய்ச்சி நிலையம், மடக்கத்தரா, கேரளா-680651.
நன்றி:தினமணி
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=206178&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்

வெள்ளி

லாபம் தரும் தேனீ வளர்ப்பு


சிதம்பரம், பிப். 17: சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யாமல், குறைந்த அளவு மனித உழைப்பில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு பற்றி சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர் தெரிந்து கொள்வது அவசியம்.
தேனீக்கள் வகையும், வாழ்க்கை முறையும்: உலகம் முழுவதும் பலவகைத் தேனீக்கள் உள்ளன. குறிப்பாக நமது நாட்டில் மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலியத் தேனீ என ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இதில் இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீ மட்டுமே மனிதர்கள் பராமரித்து வளர்க்கக் கூடியவை.
தேனீ குடும்பம் ஒன்றில் ஒரு ராணித் தேனீயும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இதில் ராணித்தேனீ கூட்டுத் தலைவி. இது மூன்று ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. முட்டை இடுவது மட்டும்தான் இதன் முக்கிய வேலை. இனப்பெருக்கம் செய்வதுதான் ஆண் தேனீக்களுக்கு முக்கிய வேலை. இதன் வாழ்நாள் 2 மாதங்கள். ÷வேலைக்காரத் தேனீக்கள் அயராமல் பாடுபட்டுக் கொண்டே இருக்கும். இவையும் 2 மாதங்கள்தான் வாழும். தேன் சேகரித்தல், கூட்டைப் பராமரித்தல், இளம் தேனீக்களுக்கு உணவு ஊட்டுதல் என அத்தனை வேலைகளையும், இந்த வேலைக்காரத் தேனீக்கள்தான் செய்யும். உணவை சேகரிப்பதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலைக் கூட்ட  ஏக்கருக்கு 2 தேனீப் பெட்டிகள் வைக்கலாம். தேனீ வளர்ப்பை முழுநேரத் தொழிலாக செய்ய வருப்பவர்கள் ஏக்கருக்கு 50 பெட்டிகள் வரை வைத்து வளர்க்கலாம். ÷தேனீக்களின் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பழப்பயிர்களில் 50 சதவீதம் வரையிலும், எண்ணெய் வித்து பயிர்களில் 80 சதவீதம் வரையிலும், தென்னையில் 30 சதவீதம் வரையிலும் விளைச்சல் கூடுதலாக கிடைக்கின்றன.
மேலும் பருத்தி, சூரியகாந்தி, கம்பு, எள் மற்றும் பயிறுவகைப் பயிர்களில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பதற்கு முன்பு சரியான இனத்தை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும்.
இத்தாலியத் தேனீயானது சூரியகாந்தி, கம்பு, சோளம் போன்ற மதுரம் அதிகம் கிடைக்கும் பயிர்கள் உள்ள இடங்களில் மட்டுமே வளர்க்க ஏற்றவை.
இந்தத் தேனீ 20 நாள்களுக்கு ஒருமுறை நகரும் தன்மை கொண்டது. எனவே இதனை சமாளிப்பது கடினம். எனவே விவசாயிகள் கூடுமானவரை அடக்கமான இந்தியத் தேனீயை தேர்வு செய்து வளர்க்கலாம்.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரை 5 மாதங்களில்தான் அதிக பூக்கள் பூக்கும். அப்போது தேனீக்கள் அதிகளவு மகரந்தத்தை சேர்த்து தேனாக மாற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் தேன் சேகரிப்பு மிகவும் குறைவாக இருக்கும். தீபாவளி நேரத்தில் அடைமழை பெய்யும் போது தேனீக்களுக்கு உணவு கிடைக்காது அத்தகைய சமயத்தில் ஒரு பங்கு சர்க்கரையை 2 பங்கு தண்ணீரில் கலந்து ஒரு கொட்டாங்கச்சியில் வைத்தால் அதை தேனீக்கள் உண்ணும். விவசாயிகள் தோட்டங்களில், வயல்களில் தேனீக்களை வளர்க்கும் போது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இதனால் தேன்கூடு அழிந்துவிடும்.
சில முக்கிய தேவைகள்: தேனீ வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் தேனீக்கள் வளர்த்து வரும் பண்ணைக்கு நேரடியாகச் சென்று அதற்கான வேலைகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக எளிய தீர்வுகள், தேனீக்கள் கொட்டிவிடும் என்ற பயம் தெளிதல், உணர்வுப்பூர்வமாக அவற்றை எளிதில் கையாளுதல் போன்ற அனுபவம் ஏற்படும். தேனீக்கள் மனிதர்களை கொட்டினால் முடக்குவாதம், நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல நோய்களுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தேனீக்கள் கொட்டினால் பயப்படத் தேவையில்லை.
முதலீடும், லாபமும்: தற்போதைய வேளாண் சந்தையில் ஒரு தேன் பெட்டியின் விலை ரூ.900, தேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை ரூ.800. தேனீக்களை விரட்டப் பயன்படும் புகைப்பானின் விலை ரூ.250. எத்தனை பெட்டிகளை விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வைத்திருந்தாலும் ஒரு தேன் எடுக்கும் இயந்திரம் மற்றும் புகையான் இயந்திரம் இருந்தாலே போதுமானது.
ஒரு தேன் பெட்டியிலிருந்தும் மாதந்தோறும் சராசரியாக இரண்டரை கிலோ தேன் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 50 பெட்டிகளில் இருந்து சராசரியாக 100 கிலோ வரை தேன் கிடைக்கும். இதன்மூலம் ரூ.17 ஆயிரம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  தேன் மட்டுமல்லாமல் தேன் மெழுகு, தேன்பால், தேன் பிசின், தேன் விஷம் போன்ற பல பொருள்களின் விற்பனை வாயிலாக அதிக லாபம் பெற முடியும்.
ஆடு, மாடுகளைக் கூட தீவனம் கொடுத்து பராமரிப்பது கடினம். தேனீக்களை குறைந்த செலவில் வளர்த்து அதிக லாபம் பெற முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு அதிக மகசூல் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
Source:http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=198898&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=லாபம் தரும் தேனீ  வளர்ப்பு

புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு




கடலூர்,  பிப்.17:   தமிழ் இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று உள்ளது செங்காந்தள் மலர்கள். இது தென் மாவட்டங்களில் வறண்டப் பகுதிகளில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். மலைப் பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துகளில் தோல் வியாதிகள் மற்றும் வயிற்று நோய்களுக்கான மருந்துகளிலும் கலப்பைக் கிழங்கு சேர்க்கப்படுவதாக அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கடலூர் ஆறுமுகம் தெரிவித்தார். பணப் பயிராகப் பயிரிடப்பட்டு இதன் விதைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் (0.7 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை) வேதியல் பொருள்களில் (கோல்ச்சிசின் மற்றும் சூப்பர்பின்) இருந்து புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார். மலைப்பாங்கான வறண்ட நிலங்களில் கலப்பைக் கிழங்கு நன்றாகச் செழித்து வளர்கிறது. காடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து கிடந்த கலப்பைக் கிழங்கை, 1980-ல் முதல் முதலாக ஈரோடு மாவட்டம் மூலனூரிலும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பணப் பயிராக வயல்களில் பயிரிடத் தொடங்கினர் விவசாயிகள். தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு நல்ல ஆதாரம் தரும் பயிராக கலப்பைக் கிழங்கு மாறியிருப்பதாக மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் முருகன் தெரிவிக்கிறார். கலப்பைக் கிழங்கு விவசாயம் குறித்து முருகன் மேலும் கூறியது: திட்டக்குடி வட்டம் சிறுபாக்கம், இ.கீரனூர், ஐவனூர் உள்ளிட்ட கிராமங்களில் கலப்பைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. விதைப்புக்கு ஹெக்டேருக்கு 400 முதல் 500 கிலோ வரை கிழங்கு தேவைப்படும். கலப்பைக் கிழங்கு சாகுபடிச் செலவு  ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 லட்சம் ஆகும். தேசிய மருத்துவப் பயிர்கள் திட்டத்தில் தமிழக அரசு 50 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.67,500 அளிக்கிறது. மகசூலைப் பொருத்தவரை ஹெக்டேருக்கு 700 கிலோ வரை விதைகளும், 1,000 கிலோ வரை கிழங்கும் கிடைக்கும். பருவத்துக்கு ஏற்றார்போல் விதை கிலோ ரூ.1,250 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். கிழங்குக்கு கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கும். அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு முறை கிழங்கு நட்டால், 5 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகப் பலன் கிடைக்கும். சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கலப்பைக் கிழங்கு மற்றும் விதைகளைக் கொள்முதல் செய்கின்றன. எனவே கலப்பைக் கிழங்கு சாகுபடி நல்ல லாபம் தரும் பணப் பயிராகும் என்றார் முருகன்.

நன்றி: தினம‌ணி

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=198897&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி

அரியலூர்,​​ ஜன.​ 6:​ விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.​ ஆபிரகாம் தெரிவித்தார்.

​ ​ ​ இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

​ ​ ​ ​ தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்க கீழ்க்கண்ட தலைப்புகளில் இருவாரப் பயிற்சி ஜனவரி 3-வது வாரம் முதல் அரியலூர் ​ மாவட்டத்தில் 40 பேருக்கு நடைபெற இருக்கிறது.

​ ​ ​ பவர் டில்லர் இயக்குதல்,​​ பராமரித்தல்,​​ மேலாண்மை பயிற்சி,​​ பம்ப் செட்டு,​​ சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சி ஆகிய பயிற்சிகளில் சேர,​​ 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.​ பயிற்சியில் சேரும் விவசாயிகளுக்கு அரசு விதிகளின் படி,​​ பயிற்சி முடிவின் போது உதவித் தொகை,​​ சான்றிதழ் வழங்கப்படும்.

​ ​ ​ ​ அரியலூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அரியலூர் அண்ணாநகரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும்,​​ ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஜயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள

வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 
நன்றி:தினமணி
 

செவ்வாய்

Forgot your ATM debit Card Password

If you forgot your ATM debit Card Password, you can follow the below steps to get new PIN:

1. Call to this Phone NO 044 42088000 (Registered mobile No for ICICI mobile banking)

2. Press 1+1+1+CardNo (16Digit) +1+ExpiryDate (0615) (ex: 06->month, 15->year2015)

3. Customer Representative  asking your name, mother or father name, date of birth, mobile no, Email- id after that they are connect to automated phone.

4. Automated phone will tell your Card No and ask you to type 4 Digit new PIN Number TWO times

5. Successfully new pin generated.