வியாழன்

முந்திரியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்...

பண்ருட்டி, மார்ச் 31:   முந்திரி உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களை கண்டறிந்து, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை பெறலாம் என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 
பண்ருட்டி வட்டத்தில் சுமார் 16,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.   முந்திரியில் அதிக மகசூல் பெறுவது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது:  விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தோப்புகள், வயதான மற்றும் உற்பத்தி திறன் குறைந்த தோப்புகள் இருத்தல், மண் வளம், மரங்களை பராமரிப்பு செய்தல் குறைவு, உரமிடாமை, பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமையால் முந்திரி உற்பத்தி திறன் குறைகிறது.  
முந்திரியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது தேயிலைக் கொசு பூச்சியாகும். இப்பூச்சியால் 25 சதவீதம் தளிர், 30 சதவீதம் பூங்கொத்து மற்றும் 15 சதவீதம் இளங்கொட்டை பருவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 
முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து, இலைகள் நன்றாக நனைந்து ஒழுகும்படியும், உள்வாட்டத்தில் சிம்புகளிலும், கிளைகளிலும் பரவலாக தெளிக்க வேண்டும். 
எக்காரணம் கொண்டும் பைரித்திராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரியில் தேயிலை கொசுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
முந்திரியை தாக்கும் பூச்சிகளில் தேயிலைக் கொசுவும் ஒன்றாகும். இது முந்திரியில் அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவிக்கும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி பூக்கும் தருவாயில் உள்ளது. இத்தருனத்தில் இப்பூச்சியானது பூங்கொத்து மற்றும் பிஞ்சுகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை காய்ந்து கருகிவிடச் செய்கின்றன. பாதிப்பு அதிகமானால் தாக்குண்ட கிளைகள் முழுவதும் கருகிவிடும்.  எனவே, இப்பூச்சியை முந்திரி பூக்கும் பருவத்தில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35இசி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி(அ) குளோர்பைரிபாஸ் 20இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அத்தோடு பூக்கள் கொட்டுவதை தடுக்க இந்த மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கவும். பின்னர் முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சதவீத நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடித்தோமானால் முந்திரியில் அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
 நன்றி:தினமணி 
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206184&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்



தமிழகத்தில் முந்திரி ஒரு பணப்பயிராக சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் முந்திரிபருப்பு மட்டுமே அதிக வர்த்தக வாய்ப்புள்ள பொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிப்பழம் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலையே நடைமுறையில் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் மதிப்பு கூடிய பொருள்களான முந்திரி மிட்டாய், முந்திரி ஊறுகாய், முந்திரிஜாம் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.
முந்திரி ஆப்பிள்: முந்திரியின் பழத்தை பல மாநிலங்களில் "முந்திரி ஆப்பிள்' என்ற பெயரில் அழைக்கின்றனர். முந்திரி பழம் வெகு வேகமாக பதப்படுத்தப்படுவதால் கெட்டுவிடும் தன்மை கொண்டது.
இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் இருந்த தயாரிக்கப்படும் மதிப்பு கூடிய பொருள்களை பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்து ஒரு நுகர்வு
உணவு பொருளாக விற்பனை செய்ய முடியும்.
முந்திரி ஆப்பிள் மிட்டாய்: விவசாயிகள் நல்ல தரமான அழகான முந்திரி ஆப்பிள் பழங்களை மிட்டாய் தயாரிக்க தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேல் தோலை நன்றாக அகற்றிவிட்டு சர்க்கரை கரைசலில் நன்றாக வேக வைக்க வேண்டும். ÷மிருதுவான தன்மையை அடைந்தவுடன் மேலும் சர்க்கரை கரைசலின் அடர்தன்மை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மிட்டாயை 2 வார கால அளவில் சர்க்கரை நீர் வடியும் வரை காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்க 2 அல்லது 3 வார காலமாகும்.
ஒரு கிலோ முந்திரி பழத்திலிருந்து 745 கிராம் வரை முந்திரி ஆப்பிள் மிட்டாயை தயாரிக்க முடியும். அதிகளவு வைட்டமின்-சி சத்துக்கள் கொண்ட முந்திரி ஆப்பிள் முட்டாய் 50 கிராமின் விலை ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிஜாம்: முந்திரி பழங்களை நன்றாக கழுவி உப்பு கரைசலில் 2 அல்லது 3 நாள்களுக்கு முக்கி மேல் தோலை அகற்றிவிட வேண்டும். பின்னர் முந்திரி பழத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, வேக வைத்து கூழாக மாற்றி மாம்பழ கூழ் உடன் கலக்க வேண்டும்.
பின்னர் போதுமான சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் கலந்து முந்திரி ஜாம் தயாரிக்கலாம். அதிகளவு வைட்டமின் "சி' சத்துள்ள முந்திரி ஜாமை ஆறுமாத காலம் வரை வைத்து விவசாயிகள் சந்தைகளில், வணிக வளாகத்தில் விற்பனை செய்ய முடியும். தற்போது 350 கிராம் கொண்ட முந்திரி ஜாம் ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரி ஊறுகாய்: நன்றாக முற்றிய முந்திரி பழங்களை தோட்டத்திலிருந்து விவசாயிகள் காய் மற்றும் பூக்களை சேதப்படுத்தாமல் பறிக்க வேண்டும். பின்னர் நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் உப்பு கரைசலில் போட்டு நன்றாக மூழ்க செய்ய வேண்டும். இதனால் சில கசப்புகள் மற்றும் வாசனைகள் வெளியேறிவிடும். பின்னர் உப்பு கரைசலில் இருந்து பழத்துண்டுகளை எடுத்து மீண்டும் நன்றாக கழுவி, ஊறுகாய் செய்வது போல் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய்யில் ஊறுகாய் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் முந்திரி ஊறுகாய் 250 கிராம் ரூ.25 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பயிற்சி: ""முந்திரி மதிப்புக்கூடிய பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய தொழில்நுட்ப பயிற்சிகள் மேற்கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கேரளத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி நிலைய உற்பத்திக் கூடத்தை அணுகலாம்'' என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.
÷தொடர்பு முகவரி: இயக்குநர், முந்திரி ஆராய்ச்சி நிலையம், மடக்கத்தரா, கேரளா-680651.
நன்றி:தினமணி
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=206178&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்

வெள்ளி

லாபம் தரும் தேனீ வளர்ப்பு


சிதம்பரம், பிப். 17: சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யாமல், குறைந்த அளவு மனித உழைப்பில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு பற்றி சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர் தெரிந்து கொள்வது அவசியம்.
தேனீக்கள் வகையும், வாழ்க்கை முறையும்: உலகம் முழுவதும் பலவகைத் தேனீக்கள் உள்ளன. குறிப்பாக நமது நாட்டில் மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலியத் தேனீ என ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இதில் இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீ மட்டுமே மனிதர்கள் பராமரித்து வளர்க்கக் கூடியவை.
தேனீ குடும்பம் ஒன்றில் ஒரு ராணித் தேனீயும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இதில் ராணித்தேனீ கூட்டுத் தலைவி. இது மூன்று ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. முட்டை இடுவது மட்டும்தான் இதன் முக்கிய வேலை. இனப்பெருக்கம் செய்வதுதான் ஆண் தேனீக்களுக்கு முக்கிய வேலை. இதன் வாழ்நாள் 2 மாதங்கள். ÷வேலைக்காரத் தேனீக்கள் அயராமல் பாடுபட்டுக் கொண்டே இருக்கும். இவையும் 2 மாதங்கள்தான் வாழும். தேன் சேகரித்தல், கூட்டைப் பராமரித்தல், இளம் தேனீக்களுக்கு உணவு ஊட்டுதல் என அத்தனை வேலைகளையும், இந்த வேலைக்காரத் தேனீக்கள்தான் செய்யும். உணவை சேகரிப்பதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலைக் கூட்ட  ஏக்கருக்கு 2 தேனீப் பெட்டிகள் வைக்கலாம். தேனீ வளர்ப்பை முழுநேரத் தொழிலாக செய்ய வருப்பவர்கள் ஏக்கருக்கு 50 பெட்டிகள் வரை வைத்து வளர்க்கலாம். ÷தேனீக்களின் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பழப்பயிர்களில் 50 சதவீதம் வரையிலும், எண்ணெய் வித்து பயிர்களில் 80 சதவீதம் வரையிலும், தென்னையில் 30 சதவீதம் வரையிலும் விளைச்சல் கூடுதலாக கிடைக்கின்றன.
மேலும் பருத்தி, சூரியகாந்தி, கம்பு, எள் மற்றும் பயிறுவகைப் பயிர்களில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பதற்கு முன்பு சரியான இனத்தை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும்.
இத்தாலியத் தேனீயானது சூரியகாந்தி, கம்பு, சோளம் போன்ற மதுரம் அதிகம் கிடைக்கும் பயிர்கள் உள்ள இடங்களில் மட்டுமே வளர்க்க ஏற்றவை.
இந்தத் தேனீ 20 நாள்களுக்கு ஒருமுறை நகரும் தன்மை கொண்டது. எனவே இதனை சமாளிப்பது கடினம். எனவே விவசாயிகள் கூடுமானவரை அடக்கமான இந்தியத் தேனீயை தேர்வு செய்து வளர்க்கலாம்.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரை 5 மாதங்களில்தான் அதிக பூக்கள் பூக்கும். அப்போது தேனீக்கள் அதிகளவு மகரந்தத்தை சேர்த்து தேனாக மாற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் தேன் சேகரிப்பு மிகவும் குறைவாக இருக்கும். தீபாவளி நேரத்தில் அடைமழை பெய்யும் போது தேனீக்களுக்கு உணவு கிடைக்காது அத்தகைய சமயத்தில் ஒரு பங்கு சர்க்கரையை 2 பங்கு தண்ணீரில் கலந்து ஒரு கொட்டாங்கச்சியில் வைத்தால் அதை தேனீக்கள் உண்ணும். விவசாயிகள் தோட்டங்களில், வயல்களில் தேனீக்களை வளர்க்கும் போது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இதனால் தேன்கூடு அழிந்துவிடும்.
சில முக்கிய தேவைகள்: தேனீ வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் தேனீக்கள் வளர்த்து வரும் பண்ணைக்கு நேரடியாகச் சென்று அதற்கான வேலைகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக எளிய தீர்வுகள், தேனீக்கள் கொட்டிவிடும் என்ற பயம் தெளிதல், உணர்வுப்பூர்வமாக அவற்றை எளிதில் கையாளுதல் போன்ற அனுபவம் ஏற்படும். தேனீக்கள் மனிதர்களை கொட்டினால் முடக்குவாதம், நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல நோய்களுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தேனீக்கள் கொட்டினால் பயப்படத் தேவையில்லை.
முதலீடும், லாபமும்: தற்போதைய வேளாண் சந்தையில் ஒரு தேன் பெட்டியின் விலை ரூ.900, தேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை ரூ.800. தேனீக்களை விரட்டப் பயன்படும் புகைப்பானின் விலை ரூ.250. எத்தனை பெட்டிகளை விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வைத்திருந்தாலும் ஒரு தேன் எடுக்கும் இயந்திரம் மற்றும் புகையான் இயந்திரம் இருந்தாலே போதுமானது.
ஒரு தேன் பெட்டியிலிருந்தும் மாதந்தோறும் சராசரியாக இரண்டரை கிலோ தேன் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 50 பெட்டிகளில் இருந்து சராசரியாக 100 கிலோ வரை தேன் கிடைக்கும். இதன்மூலம் ரூ.17 ஆயிரம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  தேன் மட்டுமல்லாமல் தேன் மெழுகு, தேன்பால், தேன் பிசின், தேன் விஷம் போன்ற பல பொருள்களின் விற்பனை வாயிலாக அதிக லாபம் பெற முடியும்.
ஆடு, மாடுகளைக் கூட தீவனம் கொடுத்து பராமரிப்பது கடினம். தேனீக்களை குறைந்த செலவில் வளர்த்து அதிக லாபம் பெற முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு அதிக மகசூல் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
Source:http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=198898&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=லாபம் தரும் தேனீ  வளர்ப்பு

புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு




கடலூர்,  பிப்.17:   தமிழ் இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று உள்ளது செங்காந்தள் மலர்கள். இது தென் மாவட்டங்களில் வறண்டப் பகுதிகளில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். மலைப் பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துகளில் தோல் வியாதிகள் மற்றும் வயிற்று நோய்களுக்கான மருந்துகளிலும் கலப்பைக் கிழங்கு சேர்க்கப்படுவதாக அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கடலூர் ஆறுமுகம் தெரிவித்தார். பணப் பயிராகப் பயிரிடப்பட்டு இதன் விதைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் (0.7 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை) வேதியல் பொருள்களில் (கோல்ச்சிசின் மற்றும் சூப்பர்பின்) இருந்து புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார். மலைப்பாங்கான வறண்ட நிலங்களில் கலப்பைக் கிழங்கு நன்றாகச் செழித்து வளர்கிறது. காடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து கிடந்த கலப்பைக் கிழங்கை, 1980-ல் முதல் முதலாக ஈரோடு மாவட்டம் மூலனூரிலும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பணப் பயிராக வயல்களில் பயிரிடத் தொடங்கினர் விவசாயிகள். தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு நல்ல ஆதாரம் தரும் பயிராக கலப்பைக் கிழங்கு மாறியிருப்பதாக மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் முருகன் தெரிவிக்கிறார். கலப்பைக் கிழங்கு விவசாயம் குறித்து முருகன் மேலும் கூறியது: திட்டக்குடி வட்டம் சிறுபாக்கம், இ.கீரனூர், ஐவனூர் உள்ளிட்ட கிராமங்களில் கலப்பைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. விதைப்புக்கு ஹெக்டேருக்கு 400 முதல் 500 கிலோ வரை கிழங்கு தேவைப்படும். கலப்பைக் கிழங்கு சாகுபடிச் செலவு  ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 லட்சம் ஆகும். தேசிய மருத்துவப் பயிர்கள் திட்டத்தில் தமிழக அரசு 50 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.67,500 அளிக்கிறது. மகசூலைப் பொருத்தவரை ஹெக்டேருக்கு 700 கிலோ வரை விதைகளும், 1,000 கிலோ வரை கிழங்கும் கிடைக்கும். பருவத்துக்கு ஏற்றார்போல் விதை கிலோ ரூ.1,250 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். கிழங்குக்கு கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கும். அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு முறை கிழங்கு நட்டால், 5 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகப் பலன் கிடைக்கும். சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கலப்பைக் கிழங்கு மற்றும் விதைகளைக் கொள்முதல் செய்கின்றன. எனவே கலப்பைக் கிழங்கு சாகுபடி நல்ல லாபம் தரும் பணப் பயிராகும் என்றார் முருகன்.

நன்றி: தினம‌ணி

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=198897&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி

அரியலூர்,​​ ஜன.​ 6:​ விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.​ ஆபிரகாம் தெரிவித்தார்.

​ ​ ​ இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

​ ​ ​ ​ தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்க கீழ்க்கண்ட தலைப்புகளில் இருவாரப் பயிற்சி ஜனவரி 3-வது வாரம் முதல் அரியலூர் ​ மாவட்டத்தில் 40 பேருக்கு நடைபெற இருக்கிறது.

​ ​ ​ பவர் டில்லர் இயக்குதல்,​​ பராமரித்தல்,​​ மேலாண்மை பயிற்சி,​​ பம்ப் செட்டு,​​ சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சி ஆகிய பயிற்சிகளில் சேர,​​ 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.​ பயிற்சியில் சேரும் விவசாயிகளுக்கு அரசு விதிகளின் படி,​​ பயிற்சி முடிவின் போது உதவித் தொகை,​​ சான்றிதழ் வழங்கப்படும்.

​ ​ ​ ​ அரியலூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அரியலூர் அண்ணாநகரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும்,​​ ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஜயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள

வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 
நன்றி:தினமணி
 

செவ்வாய்

Forgot your ATM debit Card Password

If you forgot your ATM debit Card Password, you can follow the below steps to get new PIN:

1. Call to this Phone NO 044 42088000 (Registered mobile No for ICICI mobile banking)

2. Press 1+1+1+CardNo (16Digit) +1+ExpiryDate (0615) (ex: 06->month, 15->year2015)

3. Customer Representative  asking your name, mother or father name, date of birth, mobile no, Email- id after that they are connect to automated phone.

4. Automated phone will tell your Card No and ask you to type 4 Digit new PIN Number TWO times

5. Successfully new pin generated.