வியாழன்
Train To Karaikal-Jayamkondam-Ariyalur-Perambalur-Attur-Salem
This is proposed railway connectivity. But none of those blue (thick or sky) is approved so far. Government has to work fast to put Perambalur, Jayamkondam on railway map.
Karaikal-Attur line would be good for linking this upcoming SEZ and power plant at Jayamkondam.
1. Karaikal-Mayiladuthurai:
During British/Danish period, there was branch line from Peralam to Karaikal via Thirunallar. And there was another branch line from Mayiladuthurai to Tranquebar. But railways has abandoned those lines long back. Now they should make extend the Nagore-Karaikal line from Karaikal to Mayiladuthurai via Thirunallar, Thirukadaiyur and Tharangambadi.
2. Mayiladuthurai/Chidambaram-Jayamkondam line:
If railway has to lay Mayiladuthurai-Jayamkondam line, then they have to construct a gigantic bridge on Kollidam rives at Anaikarai. The bridge itself will consume hundreds of crores for such line. So they have proposal for Chidambaram-Jayamkondam line
3. Jayamkondam-Ariyalur-Perambalur:
This should be much possible one to connect Jayamkondam upcoming power plants with Central TN hub Trichy via Ariyalur and it has to go upt Perambalur to connect the SEZ with Karaikal port.
4. Perambur-Attur:
This line is needed so that Perambalur will not fall under branch line category. And in other way it will connect Mettur power plant with Karaikal port is short route and it will also open connection for Bangalore/Hosur/Salem/Erode/Tiruppur/Coimbatore with Perambalur SEZ.
Karaikal-Attur and Avadi-Tiruvanamalai are the important lines needed for the state as of now. Both the lines are not even in planning stage.
Road connection is so poor that it has to take single or two lane SH.
நன்றி: http://babu049.wordpress.com/2010/04/09/train-to-karaikal/
http://indianrailways.informe.com/forum/new-line-between-salem-and-karaikkal-dt398.html
துல்லியப் பண்ணையில் வாழை விவசாயம்! ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் வரை லாபம்
கடலூர்: தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. உலக அளவில் 72.5 மில்லியன் டன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு 21.77 சதவீதம். தமிழ்நாட்டில் பூவன், மொந்தன், ஏலக்கி, செவ்வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, நேந்திரம் போன்ற வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு வாழை மரத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயிகள் தற்போது வாரம் ஒரு முறை அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். இதனால் தண்ணீர் செலவு மிகஅதிகம். தேவையை விட 5 மடங்கு தண்ணீர் செலவழிக்கப்படுவதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.துல்லிய பண்ணை விவசாயத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் செலவை ஐந்தில் ஒரு பகுதியாகக் குறைக்க முடியும், அதனால் உற்பத்தியை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என்பதும் வேளாண்துறையின், புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள்.வேளாண் தொழிலுக்கு ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுவரும் இந்தக் காலத்தில், சொட்டுநீர் பாசனம் முறையை கடைப்பிடிப்பதால் வேலையாள்களின் தேவை பெருமளவுக்குக் குறைந்துவிடும். தேவைக்கு ஏற்ப சிக்கனமாக உரமிட முடியும். தனியாக சேமிப்புத் தொட்டி ஒன்றை அமைத்து, உரத்தை அதன்மூலம் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வழியாகவே பயிருக்கு அளித்துவிட முடியும்.தமிழ்நாட்டில் வாழை விவசாயத்தில் துல்லியப் பண்ணை விவசாய தொழில்நுட்பம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் துல்லியப் பண்ணை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துல்லியப் பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியமும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.மானியம் இதுகுறித்து கடலூர் தோட்டக் கலைத்துறை வேளாண் துணை இயக்குநர் கனகசபை கூறுகையில், ""துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொண்டால், வாழைப் பயிருக்கு ஹெக்டேருக்கு மத்திய அரசு மானியம் ரூ.37,440-ம், மாநில அரசு மானியம் ரூ.11,200 மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பாரம்பரிய விவசாயத்தில் வாழைப் பயிரில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. ஆனால் துல்லியப் பண்ணை விவசாயம் மூலம் ரூ.3.58 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில் வாழை விவசாயம் புதிய தொழில் நுட்பங்களுடன் அதிக லாபம் ஈட்டும் சிறந்த தொழிலாக மாற்றப்பட்டு இருக்கிறது.மேலை நாடுகளில் வாழைத்தார்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நேராக சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று விடுகின்றன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பழுக்க வைக்கப்பட்டு, சூப்பர் மார்கெட்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு எப்போதும் புதிய வாழைப் பழங்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழைப் பழங்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே பழுக்க வைக்கப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.இதனால் வாழை விவசாயிகளுக்கு ஒரே சீரான விலை கிடைக்கிறது. அத்தகைய புதிய தொழில் நுட்பங்களுக்கு தமிழக விவசாயிகளும் மாறவேண்டும். அதற்கு முதல் கட்டமாக துல்லிய பண்ணை விவசாயத்தை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.புதிய தொழில்நுட்பம்வாழை விவசாயத்தில் மகசூலாக வாழைப் பழத்தை மட்டுமே விவசாயிகள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். வாழை மட்டைகளில் இருந்து காகிதம், நார்களை பயன்படுத்தி பைகள் உள்ளிட்ட கலைப்பொருள்கள் தயாரிக்க முடியும். வாழைத் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல் போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வாழைத் தண்டு மற்றும் பூவில் இருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்றும் வாழையில் புதிய தொழில்நுட்பங்கள் தெரிவிக்கின்றன.வாழைப் பழங்களை ஜாம், பெüடர் ஆகவும் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது.துல்லியப் பண்ணை விவசாயம் குறித்து கடலூர் ராமாபுரம் முன்னோடி வாழை விவசாயி ஞானசேகரன் கூறுகையில், ""சூறாவளிக் காற்று ஏற்படாவிட்டால் கடலூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் லாபகரமானது. தண்ணீர் தேவையை குறைக்கவும், வேளாண் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் துல்லியப் பண்ணை விவசாயத்தைப் பின்பற்றி, சொட்டு நீர் பாசனம் முறையை ஒரு ஹெக்டேரில் பின்பற்ற முடிவு செய்து இருக்கிறேன். இதன்மூலம் 40 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
நன்றி : தினமணி
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=303751&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82.3.50%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
சேலம் இரும்பாலை-நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை: கருணாநிதி கோரிக்கை
சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இரும்புத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள இரும்பாலைக்கு 4,000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆலை உருவாக்கப்பட்டது. நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்ததன்பேரில் மக்கள் நிலம் வழங்கினார்கள்.
இதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகமும் அமைக்கப்பட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த மாதம் 3 மற்றும் 27ம் தேதிகளில் ஆலை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி நிலம் கொடுத்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தொகுதி எம்.எல்.ஏ. ராஜா, அரசு அதிகாரிகள் இரும்பாலை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்:
1. இரும்பாலையில் வேலை வழங்க சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்க வேண்டும்.
2. அனைத்து வேலை வாய்ப்புகளும் இதன் மூலமே நிரப்பப்பட வேண்டும்.
3. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கான வயது உச்ச வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.
4. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை பணி காலத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும். 99 வருட காலம் என்று இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
5. தற்போது 78 பேரை நியமனம் செய்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் 78 பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித் தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்து பொகாரோ இரும்பு ஆலை, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை ஆகியவற்றில் வேலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வயது வரம்பில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தகுதியான ஆட்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டும் மாநில அளவில் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி:Thatstamil
Source: http://thatstamil.oneindia.in/news/2010/05/01/workers-support-dmk-government-stalin.html
அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள இரும்பாலைக்கு 4,000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆலை உருவாக்கப்பட்டது. நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்ததன்பேரில் மக்கள் நிலம் வழங்கினார்கள்.
இதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகமும் அமைக்கப்பட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த மாதம் 3 மற்றும் 27ம் தேதிகளில் ஆலை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி நிலம் கொடுத்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தொகுதி எம்.எல்.ஏ. ராஜா, அரசு அதிகாரிகள் இரும்பாலை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்:
1. இரும்பாலையில் வேலை வழங்க சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்க வேண்டும்.
2. அனைத்து வேலை வாய்ப்புகளும் இதன் மூலமே நிரப்பப்பட வேண்டும்.
3. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கான வயது உச்ச வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.
4. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை பணி காலத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும். 99 வருட காலம் என்று இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
5. தற்போது 78 பேரை நியமனம் செய்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் 78 பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித் தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்து பொகாரோ இரும்பு ஆலை, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை ஆகியவற்றில் வேலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வயது வரம்பில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தகுதியான ஆட்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டும் மாநில அளவில் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி:Thatstamil
Source: http://thatstamil.oneindia.in/news/2010/05/01/workers-support-dmk-government-stalin.html
வெள்ளி
உத்தரப் பிரதேச மாதிரியை பின்பற்றுங்கள்: ராமதாஸ்
சென்னை, செப். 8: விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றும் உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிறது. நெல் உள்பட உணவு தானியங்களின் உற்பத்த்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை அபகரிக்கும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாயமாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காவும் நிலம் கையகப்படுத்தலுக்கும், நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கும் புதிய கொள்கையை உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ளது.அதன்படி, நில உரிமையாளர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆண்டுத் தொகை வழங்கவும், அதனை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை விரும்பாதவர்கள் ஆண்டுத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் கையப்படுத்தப்பட்டால், நிலத்தின் மதிப்பில் 25 சதவீத அளவுக்கு நிகரான தொகையை அந்த தனியார் நிறுவனத்தின் பங்குத் தொகையாக பெறுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றுகிறது.அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் நிலத்தில் 7 சதவீத பரப்புள்ள பகுதி குடியிருப்பு நோக்கத்திற்காக நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிலத்தின் குறைந்தபட்ச பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதில் 17.5 சதவீதம் நில உரிமையாளர்களுக்கு வழங்க வகை செய்யும் புரட்சிகரமான திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் தங்களது மறுப்பைக் கூட பதிவு செய்ய முடியாது. இழப்பீடு என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. நிலத்தை பறிகொடுப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் இழப்பீட்டை மட்டுமே பெற முடியும் என்று சட்டத்தில் உள்ளது. இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். நிலங்களை இழக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான புதிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.இப்படி எடுத்துச் சொல்வதால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக பழிசுமத்தாமல் உத்தரப்பிரதேச அரசின் வழியில் தமிழக விவசாயிகளுக்காக புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி :தினமணி
source:http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0baa%u0bcd+%u0baa%u0bbf%u0bb0%u0ba4%u0bc7%u0b9a+%u0bae%u0bbe%u0ba4%u0bbf%u0bb0%u0bbf%u0baf%u0bc8+%u0baa%u0bbf%u0ba9%u0bcd%u0baa%u0bb1%u0bcd%u0bb1%u0bc1%u0b99%u0bcd%u0b95%u0bb3%u0bcd:+%u0bb0%u0bbe%u0bae%u0ba4%u0bbe%u0bb8%u0bcd&artid=300298&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu
பண்டிகைக் கால பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயிகள்
கம்பு, கேழ்வரகு கதிர்களை விற்பனைக்காக கத்தைகளாகத் தயார் செய்யும் பணி.
புதுச்சேரி, செப். 9: புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் விநாயகர் சதுர்த்திக்காக பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பழங்களுடன், தானியங்களின் கதிர்கள் விநாயகருக்குப் படைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு கம்பு, கேழ்வரகு போன்ற தானிய கதிர்களைத் தேடிக் கொண்டு வீட்டில் வைத்துப் படைத்தனர்.இப்போது அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. மேலும் அது எங்கு கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் கிடைக்கும் பொருளைக் காசு கொடுத்து வாங்கிச் செல்ல தயாராகி விட்டனர். இதைப் பயன்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மற்றும் அன்றைய தினம் படைப்பதற்கான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.10 ஆண்டுகளாக கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்து வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி து. பாண்டுரங்கன், இந்த ஆண்டு முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கருத்தில் கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். 2 நாள்களுக்கு முன்பு இதை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.அரை காணி அளவில் அவர் இதைச் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மக்காச்சோளம் ஒரு கதிர் ரூ.1 என்ற விலையில் வியாபாரிகளிடம் கொடுத்துள்ளார். ஒரே வியாபாரி இவரிடம் இருந்த 7,175 கதிர்களையும் வாங்கிச் சென்றுள்ளார். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதிர்கள் இருந்தாலும் வியாபாரிகள் வாங்கிச் செல்ல தயாராக இருக்கின்றனர் என்றார் பாண்டுரங்கன்.10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்காக கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வரும் சரசு, நேரடியாக புதுச்சேரி மார்க்கெட் பகுதியில் இதைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார். நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்.அவரது மகன் பார்த்திபன் கூறுகையில், உண்மையில் விநாயகர் சதுர்த்திக்காகச் சாகுபடி செய்து இது போன்று விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்கள் வயலில் இன்னும் அறுவடை செய்யவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் அறுவடை செய்து வெள்ளி, சனிக்கிழமை மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல உள்ளோம். இந்த ஆண்டு மழையின் காரணமாக ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என்பதை கணக்கிட்டு சரியாக 3 மாதத்துக்கு முன்புதான் கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வோம். 3 மாதத்தில் பெரிய அளவில் இது போன்ற சாகுபடியால் பணம் பார்க்க முடிகிறது. எங்கள் வயலில் நாவற்பழம் மரமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே பழங்கள் விற்பனை செய்து முடிந்துவிட்டன என்றார்.14 ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த மழையால் எங்களுக்கு நஷ்டமாகதான் இருக்கும். விநாயகர் சதுர்த்தி முடிந்தால்தான் அது தெரியவரும். எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரே நாளில் 3 மடங்கு அளவுக்கு லாபம் பார்க்கின்றனர் என்றார் விவசாயி வி. சிவராமன்.வயலில் கம்பு, கேழ்வரகு அறுவடை செய்து கொண்டிருந்த அவர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.கம்பு ஒரு கதிர் ரூ.1 என்ற விலையிலும், கேழ்வரகு 50 பைசா என்ற விலையிலும் இப்போது விற்பனை செய்துள்ளதாகவும், மழையின் காரணமாக கம்பு மற்றும் கேழ்வரகு திடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.இவருடைய மனைவி தில்லையம்மாள் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சாகுபடி செய்யும் கம்பு கதிரின் மேனி அழகாக இருக்கும். இந்த ஆண்டு எங்கள் மழை பழிவாங்கிவிட்டது. இல்லையென்றால் உண்மையில் நல்ல லாபம்தான் கிடைக்கும் என்றார்.நன்றி :தினமணி
source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=300776&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சனி
ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்
ஜெயங்கொண்டம், செப். 1: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் சுபா. இளவரசன். ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சுபா. இளவரசன் பேசியது: நிலக்கரி மின் திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, 18 சிற்றூர்களின் நிலங்கள் திட்ட அலுவலகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நிலக்கரி திட்டத்தில் நிலமிழக்கும் அனைத்து மக்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும். சொத்துகளை இழக்கும் மக்களுக்கு ஏக்கருக்கு | 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அனைத்து மக்களுக்கும் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும். அமைக்கப்படும் குடியிருப்புகள் மின் திட்ட வளாகத்துக்குள் வர வேண்டும். இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். நிலக்கரி திட்டத்துக்குத் தேவையான தொழில்பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று காரணம் காட்டி இப் பகுதி மக்களுக்கு வேலை மறுப்பதை தவிர்க்க முன்னேற்பாடாக, இந்தப் பகுதியிலேயே ஓர் தொழில்பயிற்சி நிலையம் அமைத்து நிலமிழக்கும் குடும்பங்களுக்குத் தேவையான தொழில்பயிற்சியை அளிக்க வேண்டும். இத் திட்டத்தால் நிலம் வழங்கியுள்ள குடும்பங்களுக்கு வேலை கொடுத்ததுபோக, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள தகுதியுடைய அனைவருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். நிலமிழக்கும் விவசாயிகள் அனைவரின் அனைத்து அரசுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியாகும் நீரை வறண்டப் பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இத் திட்டத்தால் பாதிக்கப்படும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கும், நெசவுத் தொழிலாளர்களுக்கும் உரிய முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசின் சலுகைகளைப் பெறமுடியாத நிலையில், அப் பகுதி மக்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையை இந் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இளவரசன். ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலர் (மே)இரா. அறிவழகன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலர் மகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் மு. செல்வம், மாநிலப் பொருளர் கருப்புசாமி, மாநில கொள்கைப் பரப்புச் செயலர் கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் நகரச் செயலர் கலியமூர்த்தி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய தீர்மான நகலை ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட தனி வட்டாட்சியர் உதயகுமாரிடம், சுபா. இளவரசன் வழங்கினார்.
நன்றி :தினமணி
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=297001&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நன்றி :தினமணி
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=297001&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)