செவ்வாய்

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 26:ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெருமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா பேசியது:பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதுடன், அதில், அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அணைக்கரை பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி. ரமேஷ், டி. ரமேஷ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், தா.பழூர் ஒன்றியச் செயலர் எஸ். ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலர் வீ. ஞானசேகரன், ப. நிக்கோலஸ், கல்யாணசுந்தரம், பார்த்தீபன், எஸ்.ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நன்றி : தினமணி  

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=294070&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!

காஞ்சிபுரம்,  ஆக.20: இலவச மின்சாரம், பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் என்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவருகின்றனர். பாரம்பரியமான விவசாயத் தொழிலை விடமுடியாமலும், விட மனமில்லாலும் பல விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். ÷மாவட்ட நிர்வாக கணக்கின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,45,966 ஹெக்டேரில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேரில் கரும்பு விவசாயமும், 28,766 ஹெக்டேரில் வேர்கடலை விவசாயமும் நடைபெறுகிறது. இதில் மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே மின்மோட்டார் வைத்திருந்த விவசாயிகளும் லாபம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டீசல் என்ஜின் வைத்திருந்த பல விவசாயிகள் |50 ஆயிரம், | 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி புதிய மின் இணைப்புகளை பெற்றனர். இப்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மோட்டாரும் வழங்கப்பட உள்ளது. ÷ஆனால் | 50 ஆயிரம் செலுத்த முடியாமல் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு இன்னும் ஏழை விவசாயிகள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் டீசல் என்ஜினை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ÷அடிக்கடி டீசல் விலை உயரும்போது இந்த விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே விவசாயத்தில் லாபகரமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் டீசலை என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இன்னும் கூடுதல் ஆகிறது. ÷மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளைப் போல் டீசல் என்ஜின் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அரசு உதவ வேண்டியது அவசியம். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதுபோல் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர் இவர்கள். ÷இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் த.தமிழினியனிடம் கேட்டபோது அவர் கூறியது: டீசல் என்ஜின் வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளை டீசல் விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அட்டை வழங்கி எவ்வளவு நிலம் வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ÷இப்போது மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற டீசல் என்ஜினை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின் மோட்டார்களை சாத்தியமுள்ள இடத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் மோட்டாரை இயக்க முடியும் என்றார்.

நன்றி : தினமணி  


Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=290369&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

வெள்ளி

ஜெயங்கொண்டம் மின் திட்டம்







சென்னை, மே 27: கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) சாதனை படைத்துள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 54 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2490 மெகாவாட். இதில் 1,153 மெகாவாட் அளவு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. 


மின்னுற்பத்தியில் சாதனை:கடந்த நிதி ஆண்டில் (2009-10) மட்டும் ரூ. 4,121 கோடி அளவுக்கு வணிகம் செய்துள்ளது. நிகர லாபமாக ரூ. 1,247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 51.9 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான திட்டமிடுதல் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை தொழிலகங்களில் பெற்றதன் மூலம் அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. என்.எல்.சி. தனது 4 சுரங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 223 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதே போல அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,765 யூனிட் மின்னுற்பத்தி செய்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தி அளவாகும்.  கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டு,ரூ. 167.77 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி ஈவுத் தொகையாக 10 சதவீதம் வழங்க என்.எல்.சி. இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பங்கு ஈவுத் தொகைக்காக ரூ. 335.54 கோடி செலவிடப்படும். 

கட்டுமான திட்டங்கள்:நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தில்  250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றொரு 250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு வரும் ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி இது தொடங்கி வைக்கப்படும். மற்றொரு மின்னுற்பத்திப் பிரிவு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும். 



காற்றாலை மின்னுற்பத்தி:
தமிழகத்தில் செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலைகளை நிறுவி 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.நெய்வேலி நகரியத்தில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தி எப்போது? 


தமிழக மின் வாரியமும், என்.எல்.சி.யும் இணைந்து கூட்டு முயற்சியாக என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தை அமைத்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடியில் ரூ. 5 ஆயிரம் கோடி (ஆயிரம் மெகாவாட் திறனுள்ள) புதிய அனல் மின் நிலையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தியின்போது கொதிகலன்களுக்கு எரிபொருளாக பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் 2012-13-ல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 4290 மெகாவாட் அளவுக்கு உயரும். 

ஜெயங்கொண்டம் மின் திட்டம்:தமிழகத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கவும், 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 


புதிய திட்டங்கள்:அதிநவீன மின்னுற்பத்தி திட்டத்தின் கீழ் சென்னை அருகே செய்யூரில் (4,000 மெகாவாட்) ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுதல், உற்பத்தி, நிர்வகித்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 
இதுதவிர ரூ. 2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மற்றொரு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதற்கு 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போதிய ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.சுற்றுச்சூழல் விதிகளை என்.எல்.சி. மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறது என்றார் அன்சாரி. என்.எல்.சி. இயக்குநர்கள் கே. சேகர் (நிதி),ஆர். கந்தசாமி (திட்டங்கள்) உடனிருந்தனர்
நன்றி : தினமணி

புதன்

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?





ஜெயங்கொண்டம்,மே 16:அரியலூர் மாவட்ட மக்களின் மிகப் பெரிய வாழ்வாதாரத் திட்டமான அனல் மின் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் பகுதியில் 80 அடி முதல் 330 அடி வரை தரமான பழுப்பு நிலக்கரி படிமம் சுமார் 115 கோடி  டன்னுக்கு மேல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதைப் பயன்படுத்தி அனல் மின் திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை,கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக அரசின் அன்றைய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்டார்.
இந்தத் திட்டத்துக்காக ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து 8,473 ஏக்கர் நன்செய் நிலங்களும் 1,053 ஏக்கர் புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
1991 ஆம் ஆண்டு மாநில அரசின் டிட்கோ நிறுவனம் மூலம் சுமார் ரூ.63 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைக் கைவிடும் நிலை உருவானது.இந்நிலையில்,மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முயற்சியால்,இந்தத் திட்டம் மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, இதற்கென மத்திய அரசு மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுநாள் வரை 11,489 நில உரிமையாளர்களில் 10,325 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மொத்தம் ரூ.36 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பெண்ணாடம்,தனவாய் போன்ற கிராமங்களில் ஓர் ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் வழங்கி,தனியார் சிமென்ட் ஆலைகள் நிலங்களைத் தன்வசப்படுத்தி உள்ளன.
இதை ஒப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். மேலும்,நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு,வீடுகளை இழந்தவர்களுக்கு அடிப்படை  வசதிகளுடன் கூடிய வீடுகள்,கல்விக் கூடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்,கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைக் கடுமையாக எதிர்த்து,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு,நிலம் இழந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு தான் ஒருபிடி மண்ணைக்கூட அள்ள முடியும் என்று  கூறி​னர்.
இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட வேண்டும் என்று 9,882 விவசாயிகள் வழக்குத்  தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை  விசாரிக்க அரசு சார்பில், இரு சார்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே,ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து,பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணி,அனல் மின் திட்டப் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி தொடங்கி,மின் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:தினமணி
Source : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=243292&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=ஜயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?

திங்கள்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா

ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை துவங்க கோரி பொதுமக்கள் போராட்டம் 
ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வலியுறுத்தி 17 கிராமங்களில் பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம்  ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும்.திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வீடுதோறும் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.அல்லது இத்திட்டத்தை கைவிட்டு விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்கி நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என ஜெயந்கொண்டம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை   நிறைவேற்ற  அரசுநடவடிக்கை  எடுக்கவில்லை .அதை கண்டித்தும்  கோரிக்கைகளை விரைவாகக் நிறைவேற்றகோரியும் ஜெயந்கொண்டம் பகுதியிலுள்ள  உடையார்பாளையம்,செங்குந்தபுரம்,மேலூர்,இலையூர்,வரியங்காவல்,தேவனூர்,கொளத்தூர்,கல்வெட்டு,கீழகுடியிருப்பு,கல்லாத்தூர்,தண்டலை,புதுக்குடி,கண்டியங்கொல்லை உட்பட 22 கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடன​டியாகச் செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற தர்னாவுக்கு ஆண்டிமடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.தர்னாவை விவசாய சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசினார்.
இப்போராட்டத்தில் எஸ்.தங்கதுரை, எம்.தங்கராசு,ஜெ.கோவிந்தசாமி,எம்.ஆர்.சுந்தரேசன்,வாசுகி தங்கமணி,ஏ.சௌரிராஜன்,கே.நாகரத்தினம்,எஸ்.வீரமணி,சி.கொளஞ்சிநாதன்,எஸ்.என்.துரைராஜ், பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார் தர்னாவின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் த.ஆபிரகாமிடம் கொடுத்தனர்.அதில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்,இத்திட்டம் தொடங்கப்படவில்லையென்றால் விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வியாழன்

பூச்சிகளை விரட்டும் "அரப்பு மோர்' கரைசல்

சிதம்பரம், மார்ச்  31: இயற்கை வேளாண் பண்ணைகளை கிராமங்களில் உருவாக்கி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
÷இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.
÷தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
÷இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
÷விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
÷பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.÷குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
÷அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
÷எனவே குறைந்த செலவில், காலத்தில் விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:தினமணி
 
 

காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க யோசனை

அரக்கோணம், மார்ச் 31: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தொடர்ந்து விளைச்சல் கிடைக்கும் வகையில் கால இடைவெளியை பின்பற்றி பயிர் சாகுபடி செய்தால் நல்ல விலைக் கிடைக்கும் என்று தோட்டக் கலைத் துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் பரசுராமன் கூறினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பொன்னை உபவடி நீர்ப்பகுதி விவசாயிகளுக்கான இலவச இடுபொருள் வழங்கும் விழா அரக்கோணத்தை அடுத்த காவனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பரசுராமன் பேசியது:

காய்கறிகளை பயிர் செய்வோர் தங்களின் நிலத்தை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் முதல் சாகுபடி தொடங்கிய 15 நாள் கழித்து அடுத்த பகுதியில் சாகுபடியை தொடங்க வேண்டும்.

 இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை பின்பற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளால் ஆண்டு முழுதும் காய்கறிகளை தொடர்ந்து விற்பனைச் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

 இதன் மூலம் தொடர்ந்து நல்ல விலையும், வருவாயும் கிடைப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு பிரச்னையை சந்திக்கும் சூழல் ஏற்படாது.

  விற்பனை சந்தையின் தேவைக்கும் குறைவாக காய்கறிகள் செல்லும்போது அவற்றுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார் பரசுராமன்.

கூட்டத்துக்கு ஏரிபாசன சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், தோட்டக்கலைத் துறை அரக்கோணம் உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி, நெமிலி உதவி இயக்குநர் விஜயராம், காவனூர் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி:தினமணி