வியாழன்

சேலம் இரும்பாலை-நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை: கருணாநிதி கோரிக்கை

சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இரும்புத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் [^] கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள இரும்பாலைக்கு 4,000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆலை உருவாக்கப்பட்டது. நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்ததன்பேரில் மக்கள் நிலம் வழங்கினார்கள்.

இதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகமும் அமைக்கப்பட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த மாதம் 3 மற்றும் 27ம் தேதிகளில் ஆலை முன்பு போராட்டம் [^] நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி நிலம் கொடுத்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தொகுதி எம்.எல்.ஏ. ராஜா, அரசு அதிகாரிகள் இரும்பாலை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்:

1. இரும்பாலையில் வேலை வழங்க சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்க வேண்டும்.

2. அனைத்து வேலை வாய்ப்புகளும் இதன் மூலமே நிரப்பப்பட வேண்டும்.

3. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கான வயது உச்ச வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.

4. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை பணி காலத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும். 99 வருட காலம் என்று இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.

5. தற்போது 78 பேரை நியமனம் செய்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் 78 பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித் தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்து பொகாரோ இரும்பு ஆலை, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை ஆகியவற்றில் வேலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் வயது வரம்பில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தகுதியான ஆட்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டும் மாநில அளவில் தேர்வு செய்ய வேண்டும்.

எனவே, இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நன்றி:Thatstamil

Source: http://thatstamil.oneindia.in/news/2010/05/01/workers-support-dmk-government-stalin.html

வெள்ளி

உத்தரப் பிரதேச மாதிரியை பின்பற்றுங்கள்: ராமதாஸ்



சென்னை, செப். 8: விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றும் உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிறது. நெல் உள்பட உணவு தானியங்களின் உற்பத்த்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை அபகரிக்கும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாயமாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காவும் நிலம் கையகப்படுத்தலுக்கும், நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கும் புதிய கொள்கையை உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ளது.அதன்படி, நில உரிமையாளர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆண்டுத் தொகை வழங்கவும், அதனை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை விரும்பாதவர்கள் ஆண்டுத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் கையப்படுத்தப்பட்டால், நிலத்தின் மதிப்பில் 25 சதவீத அளவுக்கு நிகரான தொகையை அந்த தனியார் நிறுவனத்தின் பங்குத் தொகையாக பெறுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றுகிறது.அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் நிலத்தில் 7 சதவீத பரப்புள்ள பகுதி குடியிருப்பு நோக்கத்திற்காக நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிலத்தின் குறைந்தபட்ச பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதில் 17.5 சதவீதம் நில உரிமையாளர்களுக்கு வழங்க வகை செய்யும் புரட்சிகரமான திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் தங்களது மறுப்பைக் கூட பதிவு செய்ய முடியாது. இழப்பீடு என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. நிலத்தை பறிகொடுப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் இழப்பீட்டை மட்டுமே பெற முடியும் என்று சட்டத்தில் உள்ளது. இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். நிலங்களை இழக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான புதிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.இப்படி எடுத்துச் சொல்வதால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக பழிசுமத்தாமல் உத்தரப்பிரதேச அரசின் வழியில் தமிழக விவசாயிகளுக்காக புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி :தினமணி 


source:http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0b89%u0ba4%u0bcd%u0ba4%u0bb0%u0baa%u0bcd+%u0baa%u0bbf%u0bb0%u0ba4%u0bc7%u0b9a+%u0bae%u0bbe%u0ba4%u0bbf%u0bb0%u0bbf%u0baf%u0bc8+%u0baa%u0bbf%u0ba9%u0bcd%u0baa%u0bb1%u0bcd%u0bb1%u0bc1%u0b99%u0bcd%u0b95%u0bb3%u0bcd:+%u0bb0%u0bbe%u0bae%u0ba4%u0bbe%u0bb8%u0bcd&artid=300298&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

பண்டிகைக் கால பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயிகள்

கம்பு, கேழ்வரகு கதிர்களை விற்பனைக்காக கத்தைகளாகத் தயார் செய்யும் பணி.
புதுச்சேரி,  செப்.  9:  புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் விநாயகர் சதுர்த்திக்காக பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பழங்களுடன், தானியங்களின் கதிர்கள் விநாயகருக்குப் படைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு கம்பு, கேழ்வரகு போன்ற தானிய கதிர்களைத் தேடிக் கொண்டு வீட்டில் வைத்துப் படைத்தனர்.இப்போது அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. மேலும் அது எங்கு கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் கிடைக்கும் பொருளைக் காசு கொடுத்து வாங்கிச் செல்ல தயாராகி விட்டனர். இதைப் பயன்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மற்றும் அன்றைய தினம் படைப்பதற்கான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.10 ஆண்டுகளாக கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்து வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி து. பாண்டுரங்கன், இந்த ஆண்டு முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கருத்தில் கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். 2 நாள்களுக்கு முன்பு இதை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.அரை காணி அளவில் அவர் இதைச் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மக்காச்சோளம் ஒரு கதிர் ரூ.1 என்ற விலையில் வியாபாரிகளிடம் கொடுத்துள்ளார். ஒரே வியாபாரி இவரிடம் இருந்த 7,175 கதிர்களையும் வாங்கிச் சென்றுள்ளார். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதிர்கள் இருந்தாலும் வியாபாரிகள் வாங்கிச் செல்ல தயாராக இருக்கின்றனர் என்றார் பாண்டுரங்கன்.10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்காக கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வரும் சரசு, நேரடியாக புதுச்சேரி மார்க்கெட் பகுதியில் இதைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார். நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்.அவரது மகன் பார்த்திபன் கூறுகையில், உண்மையில் விநாயகர் சதுர்த்திக்காகச் சாகுபடி செய்து இது போன்று விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்கள் வயலில் இன்னும் அறுவடை செய்யவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் அறுவடை செய்து வெள்ளி, சனிக்கிழமை மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல உள்ளோம். இந்த ஆண்டு மழையின் காரணமாக ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என்பதை கணக்கிட்டு சரியாக 3 மாதத்துக்கு முன்புதான் கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வோம். 3 மாதத்தில் பெரிய அளவில் இது போன்ற சாகுபடியால் பணம் பார்க்க முடிகிறது.  எங்கள் வயலில் நாவற்பழம் மரமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே பழங்கள் விற்பனை செய்து முடிந்துவிட்டன என்றார்.14 ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த மழையால் எங்களுக்கு நஷ்டமாகதான் இருக்கும். விநாயகர் சதுர்த்தி முடிந்தால்தான் அது தெரியவரும். எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரே நாளில் 3 மடங்கு அளவுக்கு லாபம் பார்க்கின்றனர் என்றார் விவசாயி வி. சிவராமன்.வயலில் கம்பு, கேழ்வரகு அறுவடை செய்து கொண்டிருந்த அவர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.கம்பு ஒரு கதிர் ரூ.1 என்ற விலையிலும், கேழ்வரகு 50 பைசா என்ற விலையிலும் இப்போது விற்பனை செய்துள்ளதாகவும், மழையின் காரணமாக கம்பு மற்றும் கேழ்வரகு திடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.இவருடைய மனைவி தில்லையம்மாள் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சாகுபடி செய்யும் கம்பு கதிரின் மேனி அழகாக இருக்கும். இந்த ஆண்டு எங்கள் மழை பழிவாங்கிவிட்டது. இல்லையென்றால் உண்மையில் நல்ல லாபம்தான் கிடைக்கும் என்றார்.

நன்றி :தினமணி 


source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=300776&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சனி

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்

ஜெயங்கொண்டம், செப். 1: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனர்  தலைவர் சுபா. இளவரசன்.  ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில்   புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சுபா. இளவரசன் பேசியது:    நிலக்கரி மின் திட்டம் தொடங்குவதாக  அறிவிக்கப்பட்டு, 18 சிற்றூர்களின் நிலங்கள் திட்ட  அலுவலகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 15  ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நிலக்கரி திட்டத்தில் நிலமிழக்கும் அனைத்து மக்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும்.    சொத்துகளை இழக்கும் மக்களுக்கு ஏக்கருக்கு | 10  லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அனைத்து மக்களுக்கும்  கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும். அமைக்கப்படும் குடியிருப்புகள் மின் திட்ட வளாகத்துக்குள் வர வேண்டும்.   இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும்  அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தில் வேலை வழங்க  வேண்டும். நிலக்கரி திட்டத்துக்குத் தேவையான தொழில்பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று காரணம் காட்டி இப் பகுதி  மக்களுக்கு வேலை மறுப்பதை தவிர்க்க முன்னேற்பாடாக,  இந்தப் பகுதியிலேயே ஓர் தொழில்பயிற்சி நிலையம் அமைத்து  நிலமிழக்கும் குடும்பங்களுக்குத் தேவையான தொழில்பயிற்சியை அளிக்க வேண்டும்.   இத் திட்டத்தால் நிலம் வழங்கியுள்ள குடும்பங்களுக்கு  வேலை கொடுத்ததுபோக, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள தகுதியுடைய அனைவருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.   நிலமிழக்கும் விவசாயிகள் அனைவரின் அனைத்து அரசுக்  கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.    நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியாகும் நீரை வறண்டப்  பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.    இத் திட்டத்தால் பாதிக்கப்படும் நிலமற்ற கூலித்  தொழிலாளர்களுக்கும், நெசவுத் தொழிலாளர்களுக்கும் உரிய  முன்னுரிமை வழங்க வேண்டும்.    கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசின்  சலுகைகளைப் பெறமுடியாத நிலையில், அப் பகுதி  மக்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையை இந் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், இந்தத் திட்டம்  தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இளவரசன்.      ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலர் (மே)இரா. அறிவழகன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலர் மகேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் மு. செல்வம், மாநிலப் பொருளர் கருப்புசாமி, மாநில கொள்கைப் பரப்புச் செயலர் கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் நகரச் செயலர்  கலியமூர்த்தி நன்றி கூறினார்.     ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய தீர்மான நகலை ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட தனி  வட்டாட்சியர் உதயகுமாரிடம், சுபா. இளவரசன் வழங்கினார்.

நன்றி :தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=297001&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

செவ்வாய்

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 26:ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெருமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா பேசியது:பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதுடன், அதில், அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அணைக்கரை பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலர் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி. ரமேஷ், டி. ரமேஷ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், தா.பழூர் ஒன்றியச் செயலர் எஸ். ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலர் வீ. ஞானசேகரன், ப. நிக்கோலஸ், கல்யாணசுந்தரம், பார்த்தீபன், எஸ்.ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நன்றி : தினமணி  

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=294070&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!

காஞ்சிபுரம்,  ஆக.20: இலவச மின்சாரம், பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் என்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ÷காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவருகின்றனர். பாரம்பரியமான விவசாயத் தொழிலை விடமுடியாமலும், விட மனமில்லாலும் பல விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். ÷மாவட்ட நிர்வாக கணக்கின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,45,966 ஹெக்டேரில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேரில் கரும்பு விவசாயமும், 28,766 ஹெக்டேரில் வேர்கடலை விவசாயமும் நடைபெறுகிறது. இதில் மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே மின்மோட்டார் வைத்திருந்த விவசாயிகளும் லாபம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டீசல் என்ஜின் வைத்திருந்த பல விவசாயிகள் |50 ஆயிரம், | 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி புதிய மின் இணைப்புகளை பெற்றனர். இப்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மோட்டாரும் வழங்கப்பட உள்ளது. ÷ஆனால் | 50 ஆயிரம் செலுத்த முடியாமல் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு இன்னும் ஏழை விவசாயிகள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் டீசல் என்ஜினை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ÷அடிக்கடி டீசல் விலை உயரும்போது இந்த விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே விவசாயத்தில் லாபகரமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் டீசலை என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இன்னும் கூடுதல் ஆகிறது. ÷மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளைப் போல் டீசல் என்ஜின் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அரசு உதவ வேண்டியது அவசியம். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவதுபோல் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர் இவர்கள். ÷இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் த.தமிழினியனிடம் கேட்டபோது அவர் கூறியது: டீசல் என்ஜின் வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளை டீசல் விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அட்டை வழங்கி எவ்வளவு நிலம் வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ÷இப்போது மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற டீசல் என்ஜினை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின் மோட்டார்களை சாத்தியமுள்ள இடத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் மோட்டாரை இயக்க முடியும் என்றார்.

நன்றி : தினமணி  


Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=290369&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

வெள்ளி

ஜெயங்கொண்டம் மின் திட்டம்







சென்னை, மே 27: கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) சாதனை படைத்துள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 54 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2490 மெகாவாட். இதில் 1,153 மெகாவாட் அளவு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. 


மின்னுற்பத்தியில் சாதனை:கடந்த நிதி ஆண்டில் (2009-10) மட்டும் ரூ. 4,121 கோடி அளவுக்கு வணிகம் செய்துள்ளது. நிகர லாபமாக ரூ. 1,247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 51.9 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான திட்டமிடுதல் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை தொழிலகங்களில் பெற்றதன் மூலம் அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. என்.எல்.சி. தனது 4 சுரங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 223 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதே போல அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,765 யூனிட் மின்னுற்பத்தி செய்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தி அளவாகும்.  கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டு,ரூ. 167.77 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி ஈவுத் தொகையாக 10 சதவீதம் வழங்க என்.எல்.சி. இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பங்கு ஈவுத் தொகைக்காக ரூ. 335.54 கோடி செலவிடப்படும். 

கட்டுமான திட்டங்கள்:நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தில்  250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றொரு 250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு வரும் ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி இது தொடங்கி வைக்கப்படும். மற்றொரு மின்னுற்பத்திப் பிரிவு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும். 



காற்றாலை மின்னுற்பத்தி:
தமிழகத்தில் செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலைகளை நிறுவி 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.நெய்வேலி நகரியத்தில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தி எப்போது? 


தமிழக மின் வாரியமும், என்.எல்.சி.யும் இணைந்து கூட்டு முயற்சியாக என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தை அமைத்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடியில் ரூ. 5 ஆயிரம் கோடி (ஆயிரம் மெகாவாட் திறனுள்ள) புதிய அனல் மின் நிலையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தியின்போது கொதிகலன்களுக்கு எரிபொருளாக பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் 2012-13-ல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 4290 மெகாவாட் அளவுக்கு உயரும். 

ஜெயங்கொண்டம் மின் திட்டம்:தமிழகத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கவும், 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 


புதிய திட்டங்கள்:அதிநவீன மின்னுற்பத்தி திட்டத்தின் கீழ் சென்னை அருகே செய்யூரில் (4,000 மெகாவாட்) ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுதல், உற்பத்தி, நிர்வகித்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 
இதுதவிர ரூ. 2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மற்றொரு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதற்கு 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போதிய ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.சுற்றுச்சூழல் விதிகளை என்.எல்.சி. மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறது என்றார் அன்சாரி. என்.எல்.சி. இயக்குநர்கள் கே. சேகர் (நிதி),ஆர். கந்தசாமி (திட்டங்கள்) உடனிருந்தனர்
நன்றி : தினமணி